ராஞ்சி:

கால்நடை தீவனம் ஊழல் வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து வரும் லாலு பிரசாத் யாதவ் உடல்நிலை காரணமாக பல மாதங்களாக ராஞ்சி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரை ராஞ்சியில் உள்ள சிறைச்சாலைக்கு மாற்றுவது குறித்து பலர் கேள்வி எழுப்பியிருக்கும் நிலையில், அவரை சிறைக்கு மாற்றுவதில் சிரமம் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்து உள்ளனர்.

பீகார் முன்னாள் முதல்வரும்ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவருமானலாலு பிரசாத் யாதவ் மீது கால்நடை தீவனம் கொள்முதல் செய்ததில் ஊழல் செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த வழக்கு அவருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்த நிலையில், கடந்த ஆண்டு அவரது மகன் திருமணத்திற்காக பரோலில் வந்தவர், தொடர்ந்த உடல்நிலை பாதிக்கப்பட்டதால், அருகிலுள்ள ராஞ்சி மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த நிலையில், அவர் பல மாதங்களாக மருத்துவமனையில் சொகுசாக இருப்பதாக எதிர்க் எகட்சியினர் குற்றம் சாட்டி வருகின்றனர். இதற்கிடையில் பொதுமக்கள் பலரும் இது தொடர்பாக சிறைத்துறைக்கு போன் செய்து லாலு ஏன் மீண்டும் சிறைக்கு மாற்றப்படவில்லை என்று கேள்வி எழுப்பி வருவதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் கூறிய மருத்துவமனை தலைவர் டாக்டர் டி.கே.ஜா,  லாலுவுக்கு தொற்று ஏற்பட்டு உடல்நிலை பாதிக்கப்பட்டு உள்ளது என்றும், அவரது ஒரு கால் ஏற்கனவே பாதிக்கப்பட்டு இருக்கிறது. மேலும், அவருடைய ரத்தத்தில்  வெள்ளை அணுக்களின் எண் ணிக்கை 12,000 ஆக அதிகரித்து உள்ளது, பொதுவாக இது 4000 முதல் 5000 வரையில் இருக்க வேண்டும், ஆனால் அவருக்கு அதிகரித்துள்ளதால், அதற்காக சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. எனவே அவரை உடனே சிறைக்கு மாற்றுவது சாத்தியமில்லை என்று கூறினார்.

ஏற்கனவே அவருக்கு சிகிச்சை அளித்த  ராஞ்சியிலுள்ள ராஜேந்திரா மருத்துவ கல்வி மருத்துவமனை இயக்குநர் ஆர்.கே. ஸ்ரீவாஸ்தவா கூறுகையில், லாலு மன அழுத்தத்தில் இருப்பதாக ஏற்கனவே தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.