பாட்னா
திமுக தலைவர் மு க ஸ்டாலினுக்கு பீகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவ் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவை தேர்தலில் திமுக முன்னணியில் உள்ளது. இம்முறை 10 ஆண்டுகளுக்கு பிறகு அக்கட்சி மு க ஸ்டாலின் தலைமையில் மீண்டும் ஆட்சி அமைக்க உள்ளது.
இதையொட்டி டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்டோர் முக ஸ்டாலின்னுக்கு ஏற்கனவே வாழ்த்து தெரிவித்துள்ளனர். அவ்வகையில் பீகார் முன்னாள் முதல்வரும் ராஷ்டிரிய ஜனதா கட்சி தலைவருமான லாலு பிரசாத் யாதவ் டிவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
லாலு பிரசாத் யாதவ் தனது டிவிட்டரில், “திரு முக ஸ்டாலின் அவர்களே, உங்கள் வெற்றிக்கு மிகுந்த பாராட்டுக்கல், மரியாதைக்குறிய கலைஞர் கருணாநிதி ஜி வழியில் நீங்களும் சமூக நீதியை எடுத்துச் சென்று திராவிட சகோதர சகோதரிகளின் விருப்பத்துக்கு ஏற்ப நடப்பீர்கள் என நம்புகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.