லாலு குடும்பத்தின் பினாமி சொத்துக்கள் : அரசு பறிமுதல்

Must read

டில்லி

லாலு பிரசாத் யாதவின் குடும்பத்தினருடைய ரூ 175 கோடி மதிப்புள்ள பினாமி சொத்துக்களை வருமானவரித்துறை பறிமுதல் செய்துள்ளது.

பினாமிகள் மூலம் 1000 கோடி ரூபாய்க்கு மேல் சொத்துக்களை வாங்கிக் குவித்ததாக லாலு பிரசாத் யாதவின் மகள் மிசா பாரதி, அவர் கணவர் சைலேஷ், சகோதரிகள் ராகினி மற்றும் சந்தா, பீகார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் முன்னாள் முதல்வர் ராப்ரி தேவி ஆகியோர் மீது வருமானவரித்துறை விசாரணை தொடர்ந்தது தெரிந்ததே

இந்த விசாரணையில் கிடைத்த தகவல்கள் மூலம் பல சொத்துக்கள் பினாமிகள் பெயரில் மேற்கூறிய லாலுவின் குடும்பத்தினர் வாங்கி இருப்பது கண்டுபிடிக்கப் பட்டுள்ளது.  அதன் அடிப்படையில் 12 ப்ளாட்டுகள் உட்பட பல சொத்துக்கள் வருமானவரித்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது

பறிமுதல் செய்யப்பட்ட சொத்துக்கள் விவரம்

1.   பண்ணை வீடு, பிஜ்வாசன், டெல்லி

பினாமிகள் : மிஷைல் பாக்கர்ஸ் அண்ட் பிரிண்டர்ஸ் பி லிட்

உண்மையான சொந்தக்காரர்கள் : மிசா பாரதி, சைலேஷ்குமார

காட்டப்பட்ட மதிப்பு : ரூ 1.4 கோடிகள்

அசல் மதிப்பு : ரூ 40 கோடிகள்

2.   1088, நியூ ஃப்ரெண்ட்ஸ் காலனி,

பினாமிகள் : ஏ பி எக்ஸ்போர்ட்ஸ் பி லிட்

உண்மையான சொந்தக்காரர்கள் தேஜஸ்வி யாதவ், சந்தா, ராகினி

காட்டப்பட்ட மதிப்பு : ரூ 5 கோடிகள்

அசல் மதிப்பு : ரூ 40 கோடிகள்

3.   பாட்னா, ஜலாஸ்பூரிலுள்ள 9 மனைகள்

பினாமிகள் : டிலைட் மார்கெட்டிங்க் பி லிட்

உண்மையான சொந்தக்காரர்கள் : ராப்ரி தேவி, தேஜஸ்வி யாதவ்

காட்டப்பட்ட மதிப்பு : ரூ 1.9 கோடிகள்

அசல் மதிப்பு : ரூ 65 கோடிகள்

4.   ஜலாஸ்பூரிலுள்ள 3 மனைகள்

பினாமிகள் : ஏ கே இன்ஃபோ சிஸ்டம்ஸ்

உண்மையான சொந்தக்காரர்கள் : ராப்ரி தேவி, தேஜஸ்வி யாதவ்

காட்டப்பட்ட மதிப்பு : ரூ 1.6 கோடிகள்

அசல் மதிப்பு : ரூ 20 கோடிகள்

இந்த வழக்கில் தொடர்பு உள்ளதாக கருதப்பட்ட ஆடிட்டர் ராஜேஷ் குமார் அகர்வால் ஏற்கனவே கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது

 

 

 

More articles

Latest article