ராஞ்சி: மாட்டுத்தீவன ஊழல் வழக்கில் இருந்து லாலுபிரசாத் யாதவை  குற்றவாளி என்று அறிவித்து  செய்து ராஞ்சி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.

1990ஆம் ஆண்டு பீகார் முதல்வராக லாலு பிரசாத் யாதவ் பதவி வகித்தபோது மாட்டுத்தீவன விவகாரத்தில் ஊழல் செய்ததாக புகார் எழுந்தது.

1991-94 வரையிலான காலகட்டத்தில் பீகார் முதல்வராக லாலு பிரசாத் யாதவ் பதவி வகித்தபோது மாட்டுத்தீவனம் வாங்கியதில் பல்வேறு முறைகேடுகள் செய்து சுமார் 950 கோடி ரூபாய் ஊழல் செய்ததாக புகார் எழுந்த்து.  பீகாரின் ஒரு பகுதியாக இருந்து, தற்போது ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள சாய்பாசா மாவட்ட கருவூலத்தில் மாட்டுத்தீவனம் தொடர்பான போலி பில்களை அளித்து ரூ.37.7 கோடி ஊழலில் ஈடுபட்டதாக லாலு பிரசாத் பீகார் முன்னாள் முதல்வர் ஜெகன்நாத் மிஸ்ரா, ஐக்கிய ஜனதாதள எம்.பி. ஜெகதீஷ் சர்மா உள்ளிட்ட 44 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.  சாய்பாபா கருவூலத்திலிருந்து 78 போலி ஒதுக்கீடு கடிதங்கள் மூலம் லாலு ரூ.37.7 கோடி பணம் எடுத்தது  உறுதிப்படுத்தப்பட்டது.

இதுகுறித்து ஜார்கண்ட் உயர்நீதிமன்றத்தில் சிபிஐ வழக்கு தொடர்ந்த்து.  இந்த வழக்கில் 2013ம் ஆண்டு லாலுபிரசாத், ஜெகனாத் மிஸ்ரா உள்ளிட்டோருக்கு 5 ஆண்டு சிறை தண்டனையும்,ரூ. 25 லட்சம் அபராதமும் விதித்து உயர்நீதிமன்றம் உத்தரவு இட்டது. குற்றம் நிரூபிக்கப்பட்டதால் லாலுவின் பாராளுமன்ற உறுப்பினர் பதவி பறிக்கப்பட்டது. அவர் சிறையிலடைக்கப்பட்டார். இதையடுத்து லாலு பிரசாத் யாதவ் 11 ஆண்டுகளுக்கு தேர்தலில் நிற்க முடியாத சூழல்  ஏற்பட்டது.

இந்தத் தீர்ப்பை எதிர்த்து, லாலு பிரசாத் ஜார்கண்ட் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், லாலு பிரசாத்தை ஜாமீனில் விடுதலை செய்தது. இன்னொரு வழக்கான தியோஹர் மாவட்ட கருவூலத்தில் ரூ. 84.5 கோடியை எடுத்தது தொடர்பான வழக்கு ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள ராஞ்சி சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இதில் லாலு உள்பட 34 பேர் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டனர்.

இதில் 11 பேர் வழக்கு விசாரணையின் போதே இறந்து விட்டனர்.  ஒருவர் மட்டும் அரசு தரப்பு சாட்சியாக மாறி தனது குற்றத்தை ஒப்புக் கொண்டார்.

இந்தவழக்கு விசாரணையை ராஞ்சி சிபிஐ நீதிமன்றத்தில் நீதிபதி ஷிவ்பால் சிங், நீதிபதி எஸ்.எஸ். பிரசாத் நீதிபதி பிரதீப் குமார் விசாரித்து வந்தார்கள். இவ்வழக்கில் கடந்த 13ம் தேதி இறுதி வாதம் நிறைவடைந்தது.

இந்த வழக்கில் இன்று தீர்ப்பளிக்கப்பட்டது. இவ்வழக்கில் இருந்து லாலு பிரசாத் விடுவிக்கப்பட்டு நீதிமன்றம் உத்தரவிட்டது.

லாலு உள்ளிட்ட17 பேர் குற்றவாளிகள் என தீர்ப்பு அளித்த நீதிமன்றம் ஜெகன்நாத்மிஸ்ரா உள்ளிட்ட 6 பேர் விடுதலை செய்தது. தண்டனை விவரம் ஜனவரி 3ம் தேதி அறிவிக்கப்படும் என நீதிமன்றம் அறிவித்துள்ளது.