
அமேசான் பிரைம் வீடியோ மற்றும் சூர்யாவின் 2டி என்டர்டெய்ன்மெண்ட் நிறுவனத்திற்கு இடையேயான நான்கு திரைப்பட ஒப்பந்தத்தின் படி, ‘ராமே ஆண்டாலும் ராவணே ஆண்டாலும்’ என்ற திரைப்படம் முதலில் வெளியாகிறது.
பிக்பாஸ் பிரபலம் ரம்யா பாண்டியன் ஹீரோயினாக நடித்துள்ள இப்படத்தை அரிசில் மூர்த்தி இயக்கி உள்ளார். பாடகர் கிரிஷ் இசையமைத்துள்ள இப்படத்திற்கு மைனா சுகுமார் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
இப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி இப்படம் வருகிற 24-ந் தேதி 240 நாடுகளிலும் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். இப்படம் நேரடியாக அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது.
இப்படத்தில் இடம்பெற்றுள்ள ‘சீரா… சீரா…’ என்ற பாடல் சமீபத்தில் வெளியான நிலையில், தற்போது ‘லல்லாரியோ… லல்லாரியோ…’ என்ற பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது.