‘சிந்துபாத்’ படம் ரிலீஸ் தொடர்பாக விஜய் சேதுபதிக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார் லட்சுமி ராமகிருஷ்ணன்.

விஜய் சேதுபதியின் சிந்துபாத் கடந்த வாரம் 21-ம் தேதி ரிலீஸாவதாகக் கூறப்பட்டது. ஆனால், பைனான்ஸ் பிரச்சினையால் ரிலீஸாகவில்லை. எனவே, வருகிற 28-ம் தேதி (வெள்ளிக்கிழமை) ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அன்றைய தினமே ‘ஹவுஸ் ஓனர்’ படம் வெளியாகவுள்ள நிலையில் ‘ஹவுஸ் ஓனர்’ படத்தின் இயக்குநரான லட்சுமி ராமகிருஷ்ணன் “பெரிய படங்களைச் சுற்றியுள்ள நிச்சயமற்ற தன்மைகள், சிறியவற்றை மூழ்கடிக்கின்றன. விஜய் சேதுபதி, சிப்பாயாக எங்கள் சிறிய படத்தைக் காப்பாற்ற வேண்டும். ஏற்கெனவே திட்டமிடப்பட்ட படங்களுக்கு நேரத்தைக் கொடுக்கத் தயாரிப்பாளர்களிடம் கூறுங்கள். தேதியை 15 நாட்களுக்கு முன்னால் அறிவிக்கவும்” என ட்விட்டரில் தெரிவித்துள்ளார்

அத்துடன், வெள்ளத்தின்போது ராணுவ வீரர் ஒருவர் தன் தோளில் குழந்தை ஒன்றைச் சுமந்து செல்லும் புகைப்படத்தையும் அவர் லட்சுமி ராமகிருஷ்ணன் பகிர்ந்துள்ளார்.