நடிகை, இயக்குநர், தயாரிப்பாளர், சமூக ஆர்வலர் என பண்முகம் கொண்டவர் லட்சுமி ராமகிருஷ்ணன். இவர் பிரபல தொலைகாட்சியில் ”சொல்வதெல்லாம் உண்மை” என்ற நிகழ்ச்சி நடத்தி வருவதை பலர் செம கலாய் கலாய்த்து வருவதாலும் பல திரைப்படங்களில் இவரை கிண்டல் செய்வதாலும் உடைந்து போன இவர் நேற்று முதல் தனது அனைத்து சமூக வலைதளங்களில் இருந்தும் தான் விடை பெறுவதாக தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார் அவர் கூறியதாவது :-
”இதுவரை, தனக்கு ஆதரவு கொடுத்தவர்கள் நன்றி. மேலும், என்னை காயப்படுத்தியவர்களுக்கும், அவமானப்படுத்தியவர்களுக்கும் நன்றி தெரிவித்து விடைபெற்றுள்ளார்.”
இவ்வாறு அவர் பதிவிட்டுயிருந்தார், சில நாட்களுக்கு முன் வெளியான கடவுள் இருக்கான் குமாரு திரைப்படத்தில் இவர் நடத்தும் நிகழ்ச்சியை கலாய்த்ததால் இவருக்கும் ஜி.வி.பிரகாஷுக்கும் டுவிட்டரில் ஒரு போர்களமே நடந்தது அதன் முடிவாக லட்சுமி ராமகிருஷ்ணன் ஜி.விக்கு கதை சொல்ல தேதி கேட்டது அதுக்கு ஜி.வி ஒகே சொன்னதும் குறிப்பிடத்தக்கது.
(மேடம் அப்போ எப்ப அந்த சேனல்ல இருந்து விலகுவிங்க…?)
Coming out of all social media NOW…Thanks to all my supporters & Best wishes to those who hurt me & insulted me:) Good luck & Bye
— Lakshmy Ramakrishnan (@LakshmyRamki) November 23, 2016