பவன் கல்யாண் கட்சியில் இணைந்து ஆச்சர்யப்படுத்திய லஷ்மி நாராயணா..!

ஐதராபாத்: சி.பி.ஐ. அமைப்பின் முன்னாள் இணை இயக்குநர் லக்ஷ்மி நாராயணா, நடிகர் பவன் கல்யாணின் ஜன சேனா கட்சியில் சேர்ந்து பலரையும் ஆச்சர்யப்படுத்தியுள்ளார்.

இதுகுறித்து கூறப்படுவதாவது; சி.பி.ஐ. அமைப்பில் இணை இயக்குநர் நிலையில் இருந்து விருப்ப ஓய்வு பெற்றவர் லஷ்மி நாராயணா. அந்த அமைப்பில் பணியாற்றியபோது, பல முக்கியத்துவம் பெற்ற வழக்குகளை விசாரித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

அவற்றில் மிக முக்கியமான ஒன்று, ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டியின் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு.

முன்னாள் ஐ.பி.எஸ். அதிகாரி லஷ்மி நாராயணா, தெலுங்கு தேசம் கட்சியில் இணைவார் என்று சில நாட்களாக தகவல்கள் இறக்கைக் கட்டிப் பறந்தன. மேலும், அவர் பாரதீய ஜனதாவில் இணையவுள்ளதாகவும்கூட செய்திகள் வந்தன.

ஆனால், அனைத்தையும் பொய்யாக்கும் வகையில், நடிகர் பவன் கல்யாணின் ஜன சேனா கட்சியில் இணைந்து, பலரையும் ஆச்சர்யப்படுத்தியுள்ளார் லஷ்மி நாராயணா.

– மதுரை மாயாண்டி

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


-=-