காஞ்சிபுரம்

காஞ்சிபுரத்தில் அத்திவரதரை தரிசிக்க இன்று பல்லாயிரக்கணக்கான பேர் வந்துள்ளனர்.

காஞ்சிபுரத்தில் 40 ஆண்டுகளுக்கு ஒரு முறை அத்திவரதர் தரிசன வைபவம் நடைபெறுவது வழக்கம். இந்த வருடம் ஜூலை 1 முதல் இந்த தரிசனம் நடந்து வருகிறது. இந்த நிகழ்வு 40 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடப்பதால் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தினமும் காஞ்சிபுரத்துக்கு வருகின்றனர்.

இன்று வார விடுமுறை என்பதால் அண்டை மாநிலங்களான ஆந்திரா, கேரளா மற்றும் ஆந்திரா ஆகிய மாநிலங்களில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்துள்ளனர். இதனால் காஞ்சிபுரம் நகரத்தில் கடும் கூட்ட நெரிசல் உண்டாகி இருக்கிறது. அத்திவரதரை காண கூட்டம் அலை மோதுகிறது.

கூட்ட நெரிசலை சமாளிக்க பாதுகாப்பு பணி தீவிரப்படுத்தப் பட்டுள்ளது. இதற்காக சுமார் 1500 காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப் பட்டுள்ளனர். அவர்கள் சுழற்சி அடிப்படையில் பாதுகாப்பு பணியை மேற்கொண்டு வருகின்றனர்.