சென்னை

திமுக கூட்டணியில் மாநிலங்களவை வேட்பாளராக நாளை அன்புமணி ராமதாஸ் வேட்புமனு தாக்கல் செய்கிறார்.

நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாமக இடம் பெற்றிருந்தது. அப்போது மாநிலங்களவை தேர்தலில் பாமகவுக்கு ஒரு இடம் அளிப்பதாக உறுதி செய்யபட்டிருந்தது. தற்போது காலியாக உள்ள 6 மாநிலங்களவை இடங்களுக்கு தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

இதில் அதிமுக கூட்டணி சார்பில் அதிமுக இரு இடங்களிலும் பாமக ஒரு இடத்திலும் மனு செய்ய உள்ளது. பாமக சார்பில் அன்புமணி ராமதாஸ் போட்டியிடுவார் என நேற்று அக்கட்சியின் தலைவர் ஜி கே மணி அறிவித்திருந்தர்.

அதன்படி அன்புமணி ராமதாஸ் அதிமுக கூட்டணியில் பாமக சார்பாக நாளை காலை 11 மணிக்கு வேட்பு மனு தாக்கல் செய்ய உள்ளார். தற்போதைய நிலவரப்படி திமுக கூட்டணி 3 இடங்களிலும் அதிமுக கூட்டணி 3 இடங்களிலும் உறுப்பினர்களை தேர்வு செய்ய முடியும்.