திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் இன்று 2வது நாளாக தொடரும் பவுர்ணமி கிரிவலம் தொடர்ந்து வருகிறது. பல லட்சம்பேர் கிரிவலம் மேற்கொண்டு வருகின்றனர். கார்த்திகை தீபத்தையொட்டி நேற்று இரவு முதல் தொடங்கிய கிரிவலம் இன்றும் தொடர்கிறது. நாளை காலை வரை கிரிவலம் செல்லும் நேரம் இருப்பதால், நாளையும் பக்தர்களின் கிரிவலம் தொடரும் என நம்பப்படுகிறது.
திருவண்ணாமலை கார்த்திகை தீபத்தின் முக்கிய நிகழ்வாக, மகாதீபம் நேற்று அண்ணாமலையார் மலை உச்சியில் தீபம் ஏற்றப்பட்டது. இதை பல லட்சம் பக்தர்கள், அண்ணாமலைக்கு அரோகரோ என்ற கோஷத்துடன் தரிசித்து, அண்ணாமலையாரின் ஆசி பெற்றனர். இதைத்தொடர்ந்து இரவு கிரிவலம் சென்றனர். இன்று கார்த்திகை மாதம் பவுர்ணமியை தொடர்ந்து, 2வது நாளாக கிரிவலம் வருகின்றனர்.
கார்த்திகை மாத பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம் இன்று காலை 8.14 மணிக்கு தொடங்கி, நாளை காலை 9.22 மணிக்கு நிறைவடைகிறது. இதைத்தொடர்ந்து 2-வது நாளாக இன்றும் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்று வருகின்றனர். நேரம் செல்ல செல்ல பக்தர்கள் கூட்டம் அதிகரித்தது. சிறப்பு பஸ்கள் இன்றும் இயக்கப்படுகிறது. மேலும், பக்தர்களின் வசதிக்காக நாளை வரை சிறப்பு ரெயில்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், பாதுகாப்பு ஏற்பாடுகளும் தொடர்ந்து 2 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
8லட்சம் பேர் தரிசனம் செய்த திருவண்ணாமலை மகா தீபம் – 11 நாட்கள் எரியும் சிறப்பு வாய்ந்தது…