டெல்லி: உ.பி. மாநிலத்தில் நடைபெற்ற லகிம்பூர் வன்முறையை கண்டித்து அக்டோபர் 18ந்தேதி ரயில் மறியல் (ரயில் ரெக்கோ) போராட்டம் நடைபெறும் என்று விவசாயிகள் சங்கத்தினர் அறிவித்து உள்ளனர். அதைத்தொடர்ந்து, ஒரு வாரத்தில் உ.பி.யில் கிசான் பஞ்சாயத்து நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.
உத்தரபிரதேச மாநிலத்தில், லகிம்பூர் கேரி பகுதியில் கடந்த 3-ந் தேதி அரசு விழா ஒன்றுக்கு, மாநில துணை முதல்வர் கேசவ் மவுரியா, மத்திய உள்துறை அமைச்சர் அஜய் மிஸ்ரா ஆகியோர் கலந்துகொள்வதாக இருந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அங்கு சாலையோரங்களில் விவசாயிகள் கருப்புக்கொடி போராட்டம் நடத்தி வந்தனர். அப்போது, மத்தியஅமைச்சரின் மகன் ஆசிஷ்மிஸ்ரா வந்த கார், விவசாயிகள் மீது மோடி தள்ளிவிட்டு சென்றனர். இதையடுத்து ஏற்பட்ட 4 விவசாயிகள் 4 பாஜகவினர், பத்திரிகையாளர் ஒருவர் என மொத்தம் 9 பேர் பலியாகினர். விவசாயிகள் மீது காரை மோதியவர், மத்திய மந்திரி அஜய் மிஸ்ராவின் மகன் என கூறப்படுகிறது. அவர் உச்சநீதிமன்ற எச்சரிக்கையைத் தொடர்ந்து கைது செய்யப்பட்டுள்ளார். வன்முறையைத் தொடர்ந்து. லகிம்பூர் கெரி பகுதியில் 144 தடை உத்தரவு போடப்பட்டு உள்ளது. தொடர்ந்து அங்கு பதற்றம் நிலவி வருகிறது.
இந்த நிலையில், செய்தியாளர்களை சந்தித்த பாரதிய கிசான் யூனியன் (BKU) தலைவர் ரஸ்கேஷ் திகாயத், லக்கிம்பூர் வன்முறைக்கு எதிராக அக்டோபர் 18 அன்று ஆறு மணிநேரம் “ரெயில் ரோக்கோ” போராட்டம் நடைபெறும் என்றும், அக்டோபர் 26 அன்று லக்னோவில் ஒரு பெரிய கிசான் பஞ்சாயத்து நடைபெறும் என்றும் தெரிவித்துஉள்ளார்.
லக்கிம்பூர் வன்முறை வழக்கின் மீதான விசாரணையில் திருப்தியில்லை என்று கூறிய திகாயத், மத்தியஅமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷின் “சிவப்பு கம்பள வரவேற்புடன் கைது செய்யப்பட்டுள்ளார். இது விவசாயிகளிடையே கோபத்தை தூண்டியுள்ளது. ஆஷிஸ் மிஸ்ராவின் தந்தை, மத்திய அமைச்சரான அஜய் மிஸ்ராவை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்றும், இல்லையேல், குற்றம் சாட்டப்பட்ட நபரின் தந்தை தொடர்ந்து நாற்காலியில் இருந்தால், இந்த வழக்கில் நியாயமான விசாரணையை எதிர்பார்க்க முடியாது என்று கண்டனம் தெரிவித்தார்.