சென்னை,
நீட் தேர்வு காரணமாக 1176 மதிப்பெண் எடுத்தும், மருத்துவ படிப்பு கிடைக்காததால் மனம் உடைந்த அரியலூர் மாணவி அனிதா தற்கொலை செய்துகொண்டார்.
இதன் காரணமாக தமிழகத்தில் போராட்டம் வெடித்துள்ளது. இந்நிலையில் நீட்டுக்கு ஆதரவாக புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி சர்ச்சைக்குரிய கருத்துக்களை கூறி பொதுமக்களின் வெறுப்பை சம்பாதித்து வருகிறார்.
இதற்கிடையில், கிருஷ்ணசாமி, தனது மகளுக்கு ஜெயலலிதாவின் சிபாரிசின் பேரில் மருத்துவ சீட் வாங்கினார் என்றும், பின்னர் அவரது அரசியல் நிலைப்பாடு காரணமாக அவருக்கு ஜெயலலிதா கொடுத்த மரியாதை என்ன என்பது குறித்தும் மார்க். கம்யூனிஸ்டு முன்னாள் எம்.எல்.ஏ. பாலபாரதி தனது பேஸ்புக் வலைதளத்தில் பதிவிட்டிருந்தார்.
மேலும், புறவாசல் வழியாக உதவியைப் பெற்றுக்கொண்டவர் தம்மகளுக்கு ஒருநீதி அனிதாவுக்கு இன்னொரு நீதி என முழங்கி வருவதுதான் வேதனை என்றும் கூறியிருந்தார்.
இதைத்தொடர்ந்து டாக்டர் கிருஷ்ணசாமி, அந்த பொம்பளையை (பாலபாலதி) நான் பார்த்ததே இல்லை என்று பதில் கூறியிருந்தார்.
இதற்கு பதில் தெரிவித்துளள பாலபாரதி,
உன்னை பெற்றது யார்? உன் துணையாக வந்தது யார்? நீ பெற்றது யாரை? யாருக்காக ஷீட் கேட்டாய்? எல்லா கேள்விகளுக்கும் ஒரே பதில் டாக்டர் கிருஷ்ணசாமி – பொம்பளை என்று பதில்கூறி மீண்டும் பதிவிட்டுள்ளார்.