டெல்லி: கல்வான் தாக்குதலில் சீனா 40க்கும் மேற்பட்ட வீரர்கள் கொல்லப்பட்டனர் என்று மத்திய அமைச்சர் ஜெனரல் வி.கே. சிங் தெரிவித்துள்ளார்.
லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் இந்திய-சீன படைகளுக்கு இடையே கடந்த 15ந்தேதி நடந்த கடும் மோதல் எழுந்தது. இந்த விவகாரம் சர்வதேச அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மோதலில் இந்திய தரப்பில் 20 வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். மோதலை தொடர்ந்து கருத்து வெளியிட்ட சீனா, கல்வான் பள்ளத்தாக்கு பகுதி தங்களுக்கு சொந்தமானது என கூறியது.
இது மிகைப்படுத்தப்பட்ட கூற்று, ஏற்க முடியாது என்றும் ஏற்கனவே இந்தியா தெரிவித்து இருந்தது. இந் நிலையில், கல்வான் பகுதியில் நடந்த வன்முறை மோதலில் இந்தியா 20 வீரர்களை இழந்த நிலையில், சீனா 40 க்கும் மேற்பட்ட வீரர்களை இழந்தது, மத்திய அமைச்சர் ஜெனரல் வி.கே. சிங் கூறினார்.
அவர் மேலும் கூறியதாவது: நாங்கள் 20 வீரர்களை இழந்தால், அவர்களின் பக்கத்தில் இரு மடங்கிற்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர். சீனா எண்களை மறைக்கிறது. 1962 போரில் கூட, அது உயிரிழப்புகளை ஏற்கவில்லை என்றார்.