சீன அதிபர் மீது  உ.பி. போலீசாரிடம் புகார்

உத்தரப்பிரதேச மாநிலம் லட்சுமிபூர் கேரி மாவட்டத்தைச் சேர்ந்த பலர் டெல்லி, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் கூலி வேலை பார்த்து பிழைத்து வந்தனர்.

கொரோனா வைரஸ் பரவியதால் அவர்கள், அங்கிருந்து சொந்த கிராமங்களுக்கு  மீண்டும் வந்து விட்டனர்.

கொரோனா தொற்று இருக்கலாம் என்பதால் அவர்களை ஊருக்குள் நுழையக் கிராம மக்கள் அனுமதி மறுத்து விட்டனர்.

இப்போது அவர்கள் தனிமைப் படுத்தப்பட்ட முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

அந்த தொழிலாளர்கள் அங்குள்ள பாலியாகாலன் காவல் நிலையத்தில் புகார் ஒன்று அளித்துள்ளனர்.

‘,உலகம் முழுவதும் கொரோனா வைரசைப் பரவவிட்ட சீன அதிபர் ஜி- சிங் பிங் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும்’’ என்று தங்கள் புகார் மனுவில் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

’’கொரோனாவால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் சீனா நஷ்ட ஈடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றும் அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

மனு மீது என்ன நடவடிக்கை எடுக்கப்படும்?

‘’நாங்கள் வழக்குப்பதிவு செய்ய முடியாது, இந்த புகார் மனுவை உயர் அதிகாரிகளுக்கு அனுப்பி வைப்போம்’’ என்று பதில் அளித்துள்ளார், பாலியா காவல் நிலைய ஆய்வாளர்.

என்னென்னவெல்லாம் நடக்குது..

 

-ஏழுமலை வெங்கடேசன்