கிக்கி சேலஞ், ஐஸ் பக்கெட் சேலஞ்ச், பிட்னஸ் சேலஞ்ச், நில்லு நில்லு சேலஞ் போன்றது போல் தற்போது சமூக வலைத்தளங்களில் ‘பாட்டில் கேப் சேலஞ்ச்’ என்ற புதிய சேலஞ்ச் வைரலாகி வருகிறது.
பாட்டிலின் மூடியைக் கால்களால் உதைத்து, அந்த மூடியை நீக்க வெண்டும். அதே நேரம், பாட்டிலும் கீழே விழக்கூடாது என்பது தான் இந்த ‘பாட்டில் கேப் சேலஞ்ச்’ .
‘ஜேசன் ஸ்டாதம், லீவிஸ் டான், பாலிவுட் நடிகர் அக்சயகுமார் என்று பலரும் இதை வெற்றிகரமாகச் செய்து வீடியோ வெளியிட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் இந்த சேலஞ்ச் செய்யும் படி குற்றம் 23 பட இயக்குநர் அறிவழகன், அருண் விஜய்க்கு சவால் விடுத்துள்ளார். ஹாலிவுட், பாலிவுட் நடிகர்கள் செய்வது போல் அருண் விஜயிடம் எதிர்பார்க்கிறேன்’ என்று கூறியுள்ளார்.