புதுமுக இயக்குநர் அன்பரசன் இயக்கத்தில் சிபிராஜ், சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் நடித்துவரும் படம் ‘வால்டர்’.

11:11 புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இதன் படப்பிடிப்பு, கடந்த ஜூன் 14-ம் தேதி தொடங்கப்பட்டது.

முழுக்க முழுக்க காவல்துறையை மையப்படுத்தி உருவாகிவரும் இந்த படத்தில் கெளதம் மேனன் வில்லனாக நடித்து வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.