சென்னை :
திரைப்பட நடிகை குஷ்பு, காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி, பாரதிய ஜனதாவில் சேரப்போவதாக நேற்று செய்திகள் பரவின.
இது குறித்து குஷ்புவின் விளக்கம்:
‘’நான், காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி அந்த கட்சியில் சேரப்போகிறேன்.. இந்த கட்சியில் சேரப்போகிறேன்’ என மாதம் தோறும் வதந்திகள் றெக்கை கட்டி பறக்கின்றன.
கடந்த 2014 ஆம் ஆண்டில் இருந்தே நான் பா.ஜ.க.வில் சேரப்போவதாக செய்திகள் வந்து கொண்டு இருக்கின்றன. இது போன்ற வதந்திகளுக்கு நான் பதில் சொல்ல விரும்பவில்லை.
உத்தரபிரதேசத்தில் இளம்பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்டதை கண்டித்து சென்னையில் திங்கள்கிழமை காங்கிரஸ் சார்பில் நடைபெற்ற சத்தியாகிரக போராட்டத்தில் நான் கலந்து கொண்டுள்ளேன்.
பா.ஜ.க.வில் சேரப்போவதாக இருந்தால் நான் ஏன் இந்த போராட்டத்தில் பங்கேற்று இருக்க வேண்டும்?’’
என்று விளக்கம் அளித்துள்ளார், காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் குஷ்பு.
-பா.பாரதி.