
குல்பூஷன் ஜாதவ் மரண் தண்டனையை நிறுத்தி வைத்துசர்வதேச நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்திய முன்னாள் கடற்படை அதிகாரி குல்பூஷன் ஜாதவுக்கு பாகிஸ்தான் ராணுவ நீதிமன்றம் தூக்கு தண்டனையை விதித்தது.
இதையை எதிர்த்து நெதர்லாந்தின் தி ஹேக் நகரில் உள்ள சர்வதேச நீதிமன்றத்தில் இந்தியா வழக்கு தொடர்ந்தது.

இந்த வழக்கின் முதல்கட்ட விசாரணை ஏற்கனவே நடைபெற்றிருந்தது. இந்நிலையில் இன்று இறுதி விசாரணை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
அதைத்தொடர்ந்து இன்று நடைபெற்ற விசாரணையின்போது, இந்தியாவின் கோரிக்கை நியாயமானது என்று கூறிய, சர்வதேச நீதிமன்றம், குல்பூஷன் ஜாதவ் மீதான மரண தண்டனயை நிறுத்தி வைக்க பாகிஸ்தான் அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.
மேலும், இந்திய தூதரக அதிகாரிகள் அவரை சந்திக்கவும், அவரது உறவினர்கள் சந்திக்கவும் அனுமதிக்க பாகிஸ்தான் அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.
இந்த வழக்கில் இந்தியா சார்பாக பிரபல வழக்கறிஞர் ஹரிஷ் சால்வே ஒரு ரூபாய் ஊதியம் பெற்றுக்கொண்டு ஆஜரானார் என்பது குறிப்பிடத்தக்கது.
[youtube-feed feed=1]