ந்தியாவின் இரும்பு பெண்மணி இந்திராகாந்தி பிரதமராக இருந்தபோது முதன்முதலாக அணுகுண்டு சோதனை வெற்றிகரமாக நடத்தப்பட்டது.

1974ம் ஆண்டு மே 18ந்தேதி ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சால்மர் மாவட்டத்தில் உள்ள  பொக்ரான் எனும் இடத்தில்தான் முதன்முதலாக அணுகுண்டு சோதனை நடத்தப்பட்டது.

அணுமின் திட்டத்துக்கு அமெரிக்கா, கனடா , ரஷ்யா போனற்  நாடுகள் தொழில்நுட்ப அளவில் ஆதரவு தந்திருந்தாலும், அணுகுண்டு தயாரிக்கும் பணியில் ஈடுபடக் கூடாது என்று நிபந்தனை விதித்திருந்தன.

இந்நிலையில்தான் இந்திராகாந்தி அம்மையார் பிரதமராக இருந்தபோது   1974 மே 18-ல் பொக்ரானில் அணுகுண்டு சோதனையை இந்திய அரசு வெற்றிகரமாக நடத்தியது. இது மேற்கத்திய நாடுகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

‘அமைதியான அணுக்கரு வெடிப்பு’ என்று பெயரிட்டதன் மூலம் இந்த நிபந்தனையை மீறவில்லை என்று இந்திய அரசு அறிவித்தது.

புத்தர் பிறந்த தினமான புத்த பூர்ணிமா அன்று நடத்தப்பட்டதால் இந்நிகழ்வு ‘சிரிக்கும் புத்தர்’ எனும் பெயரில் அழைக்கப்படுவதா கூறப்பட்டது,.

அதைத்தொடர்ந்து 24 ஆண்டுகளுக்கு பிறகே மீண்டும் அணுகுண்டு சோதனை நடத்தப்பட்டது.

வாஜ்பாய் ஆட்சி காலத்தில்மே 11,1998 புத்த பூர்ணிமா நாளன்று இந்தியா தனது  இரண்டாவது அணுகுண்டு சோதனையையும் வெற்றிகரமாக நடத்தி காட்டியது.

இந்த சோதனைக்கு “சக்தி” என்று  பெயரிட்டது பாரதியஜனதாஅரசு. சக்தி என்றால் சமஸ்கிருதத்தில் ஆற்றல் எனப் பொருள் தருவதுடன் இந்து சமயப் பெண் கடவுளையும் குறிக்கும் சொல்லாகும்.

இந்தியாவை மீண்டும உலக நாடுகள் அதிர்ச்சி கலந்த ஆச்சரியத்துடன் பார்க்க வைத்த இரண்டு முக்கிய நிகழ்வுகள் ஒரே இடத்தில் 24 ஆண்டுகால இடைவெளியில்  நிகழ்ந்தன.

பொக்ரைனில் அணுகுண்டு வெடித்து பரிசோதனை செய்யப்பட்ட போது, இந்தியா கூறிய பிறகே உலக நாடுகளால் அறிய முடிந்தது.  அமெரிக்கா போன்ற வல்லரசுகள் கூட ஆச்சரியப்பட்டன. எந்த ஒரு செயற்கை கோளாலும் முன் கூட்டி அறிய முடியவில்லை.

இந்த இரண்டாவது அணுகுண்டு சோதனையை நடத்த அப்போதைய காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பிரதமர் நரசிம்மராவ்தான் மூன்று ஆண்டுகளுக்கு முன்பே ஒப்புதல் கொடுத்திருந்தால்.

இந்நிலையில் அடுத்து ஆட்சிக்கு வந்த வாஜ்பாய் தலைமையிலான அரசு இரண்டாவது அணுகுண்டு சோதனையை வெற்றிகரமாக நடத்தியது.

இந்த அணுகுண்டு சோதனைக்கு மூலக்காரணமாக இருந்தவர், அப்போதைய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு நிறுவனத்தின் தலைவராகவும் பிரதமரின் தலைமை ஆலோசகராகவும் பணியாற்றிய முனைவர் அப்துல் கலாம்.

அதைத்தொடர்ந்து, அதே ஆண்டு மே 13 நாளில் மற்றொரு அணுகுண்டு சோதனை நடத்தப்பட்டது.

இந்த அணுகுண்டு சோதனைகள் இந்தியாவிற்கு எதிராக பல நாடுகள் பல்வேறுதரப்பட்ட வணிகத்தடைகளை விதிப்பதற்கு காரணமாக அமைந்தது.

மீண்டும் அதே ஆண்டு, மே 28 மற்றும் மே 30ம் நாட்களில் அணுகுண்டு சோதனைகளை நடத்தியது.

இந்த நாளை நினைவுறுத்துமாறு ஆண்டுதோறும் மே 11ஆம் நாள் தேசிய தொழில்நுட்ப நாளாகக் கொண்டாடப்படுகிறது.

இந்த நாளில் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் சிறப்பெய்திய தொழிலகங்களுக்கும் தனிநபர்களுக்கும் விருதுகள் கொடுக்கப்படுகின்றன.