சென்னை:

மிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்திய குட்கா முறைகேடு வழக்கில் 246 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கி உள்ளது.

தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்களை தயாரித்து தமிழகத்தில்  விற் பனை செய்தது தொடர்பாக, சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் சிபிஐ, அமலாக் கத்துறை வழக்கு பதிவு செய்து பலரை கைது செய்துள்ளது. குட்கோ குடோன் உரிமையாளர்  மாதவராவ், சீனிவாச ராவ், தல்லம் உமாசங்கர் உள்பட பலர் கைது செய்யப்பட்டனர்.

இது தொடர்பாக அமலாக்கத்துறை நடத்திய விசாரணையில், கடந்த 2013 ஆம் ஆண்டு முதல் 2016 ஆம் ஆண்டு வரை 639 கோடி ரூபாய்க்கு குட்கா, பான் மசாலாகக்ள்  விற்பனை செய்திருப்பது தெரிய வந்துள்ளது. சட்டவிரோத குட்கா விற்பனையில் கிடைத்த பணத்தை குடும்ப உறுப்பின ர்கள் மற்றும் உறவினர்கள் பெயரில் அவர்கள் சொத்துக்கள் வாங்கியிருப்பதாகவும், காயத்ரி ரியல்டர்ஸ், மேதா டைரி பிரைவேட் லிமிடெட் போன்ற பெயர்களில் நிலங்கள் வாங்கப்பட்டுள்ள தாகவும், அதிக அளவிலான பணம் ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்யப்பட்டு இருப்பதாகவும் அமலாக்கத்துறை சுட்டிக்காட்டி இருக்கிறது.

மேலும், தமிழகத்தில்  சென்னை,சேலம், புதுச்சேரி மட்டுமின்றி, ஆந்திர மாநிலம் குண்டூரில் அதிக அளவில் முதலீடு செய்திருப்பதாகவும் அமலாக்கத்துறை குறிப்பிட்டுள்ளது.

இதையடுத்து, சட்டவிரோத பண பரிவர்த்ததனை சட்டத்தின் கீழ் 174 அசையா சொத்துக்கள் மற்றும் நிறுவனங்களின் பங்குகள் உள்ளிட்ட அசையும் சொத்துக்கள் என 246 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள் முடக்கப்பட்டு இருப்பதாக அமலாக்கத்துறை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.