சென்னை:
கூடங்குளம் முதலாவது அணு உலையை நாட்டுக்கு அர்ப்பணிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
பாரத பிரதமர் நரேந்திர மோடி, தமிழக முதல்வர் ஜெயலலிதா, ரஷிய அதிபர் புதின், ஆகியோர்  கலந்துகொண்ட காணொளிக் காட்சி விழா நடைபெற்றது.
koodna
திருநெல்வேலி மாவட்டம், கூடங்குளத்தில் தலா 1000 மெகாவாட் உற்பத்தித் திறன் கொண்ட இரு அணுஉலைகள் உள்ளன. இதில், முதல் உலையை நாட்டுக்கு அர்ப்பணிக்கும் நிகழ்ச்சி இன்று மாலை  நடைபெற்றது.
காணொலிக் காட்சி மூலம் நடைபெறும் இந்த நிகழ்வானது ரஷிய தலைநகர் மாஸ்கோ, புது தில்லி, சென்னை, கூடங்குளம் அணுமின் நிலையம் என 4 இடங்களில் இருந்து நேரடி ஒளிபரப்பாகியது.
ரஷிய அதிபர் விளாதிமிர் புதின், இந்திய பிரதமர் நரேந்திர மோடி, தமிழக முதல்வர் ஜெயலலிதா ஆகியோர் காணொலிக் காட்சி வாயிலாக, முதல் உலையை நாட்டுக்கு அர்ப்பணித்தனர்.
 
கூடங்குளத்தில் நடைபெறும் நிகழ்வில் இந்திய அணுமின் சக்தி கழகத் தலைவர் எஸ்.கே.சர்மா, அணுஉலை வளாக இயக்குநர் ஆர்.எஸ்.சுந்தர் மற்றும் விஞ்ஞானிகள், பொறியாளர்கள் பங்கேற்றனர்.
rajiv
கூடங்குளம் – பிளாஷ்பேக்
கூடங்குளம் ஒப்பந்தம் 1988ம் ஆண்டு இந்தியப் பிரதமர்  ராஜிவ்காந்தியும், ரஷ்ய அதிபர் கார்பசேவுக்கும்  இடையே கையெழுத்தானது. அணுஉலைக்கு  இந்தியாவில் ஏற்பட்ட எதிர்ப்பு காரணமாக இத்திட்டம் பத்தாண்டுகளாக கிடப்பில் கிடந்தது. மீண்டும் 2001ம் ஆண்டு ஒப்பந்தம் புதுப்பிக்கப்பட்டது.
அணு உலைக்கு எதிராக இடிந்தகரையில் வலுத்த எதிர்ப்பின் காரணமாக உலையின் செயல்பாடு தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. போராட்டம் வலுப்பெற்றதால், கூடங்குளம் பகுதி மக்களின் அச்சம் தீர்க்கப்படும் வரை அணுமின் நிலையப் பணிகளை நிறுத்திவைக்குமாறு பிரதமரையும், மத்திய அரசையும் கேட்டுக் கொண்டு தமிழக அமைச்சரவைக் கூட்டத்தில் 22.9.2011-இல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
முன்னாள் குடியரசு தலைவர் அப்துல்கலாம் மற்றும் வல்லுநர்களின் ஆய்வுக்கு பிறகும், உலையின் பாதுகாப்பு உறுதி செய்து அளிக்கப்பட்ட அறிக்கையைத் தொடர்ந்து அணு உலை செயல்பட தமிழக அரசு அனுமதியளித்தது.
இதையடுத்து 19.3.2012-இல் கூடங்குளம் அணுமின் நிலையத்தை திறக்க தமிழக அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.
2008 ஆம் ஆண்டில் கூடுதலாக மேலும் ஆறு அணுமின் உலைகளை இங்கு உருவாக்க இந்திய அணுமின் கழகம் ரஷ்ய நாட்டுடன் உடன்படிக்கை செய்து கொண்டுள்ளது.
இதற்கிடையில் ஏப்ரல் மாதம் 3வது மற்றும் 4 வது அணு உலைக்கான ஒப்பந்தம் கையெழுத்தானது குறிப்பிடத்தக்கது
2013-ஆம் ஆண்டு நவம்பர் 22-ஆம் தேதி முதல் அணு உலையில் 160 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டது. இதன் தொடர்ச்சியாக டிசம்பரில் 425 மெகாவாட், 2014 மே மாதம் 900 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டது.
kudankulam1_1634861f
கூடங்குளம் முதலாவது அணு உலையில் இதுவரை 10 ஆயிரத்து 700 மில்லியன் யூனிட் மின்சாரம் (1,070 கோடி யூனிட்) உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.
முதல் உலையில் உற்பத்தியாகும் ஆயிரம் மெகாவாட் மின்சாரத்தில் தமிழகத்துக்கு 562.50 மெகாவாட், கர்நாடகத்துக்கு 221, கேரளத்துக்கு 122, புதுச்சேரிக்கு 33.50, ஆந்திரத்துக்கு 50 மெகாவாட் என பிரித்து வழங்கப்படுகிறது