திருவனந்தபுரம்: கேரளாவில் போக்குவரத்து ஊழியர்கள் 2 நாள்  ஸ்டிரைக் அறிவித்து உள்ளதால், அங்கு பேருந்து சேவை முடங்கி உள்ளது. இதனால், தமிழகத்தில் இருந்து கேரளா செல்லும் பேருந்துகளும் நிறுத்தப்பட்டு உள்ளன. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது.

சம்பளஉயர்வு உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கேரளா அரசு போக்குவரத்து தொழிலாளர்கள் நேற்று நள்ளிரவு முதல்  2நாள் ஸ்டிரைக் அறிவித்து உள்ளனர். இந்த  வேலை நிறுத்தத்தால், பேருந்துகள் சேவை நடைபெறாமல் முடங்கி உள்ளது. இதனால்  கேரள மக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

அதே வேளையில் தமிழகத்தில் இருந்து கேரளா செல்லும் பேருந்துகளும் நிறுத்தப்பட்டு உள்ளன.  சென்னை, கோவை மற்றும் நாகர்கோவில், தேனி உள்பட பகுதிகளில் இருந்து கேரளா செல்லும் தமிழகஅரசின் பேருந்துகளும் நிறுத்தப்பட்டுள்ளன. இதனால் தமிழகத்தில் இருந்து தொழில் நிமித்தமாக மற்றும் வேலைகளுக்காக செல்லும் தமிழர்களும் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர்.