இந்தி சினிமாவில் முன்னணி நடிகையாக விளங்குபவர் கிருதி சனம். அக்ஷய் குமார் ஜோடியாக ‘பச்சன் பாண்டே’, வருண் தவான் ஜோடியாக காமெடி படம் என கைவசம் இரு இந்தி படங்கள் உள்ளன.
கிருதி சனம், ராமாயண கதையை தழுவி எடுக்கப்படும் ‘ஆதிபுருஷ்’ என்ற புதிய படத்தில் சீதாவாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். தெலுங்கு, இந்தி ஆகிய இரு மொழிகளில் ஒரே நேரத்தில் ஷுட்டிங் நடக்கிறது.
விரைவில் இதன் படப்பிடிப்பு தொடங்க உள்ள நிலையில், கிருதி சனம் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், முக்கால் நிர்வாண கோணத்தில் தான் தோன்றும் போட்டோவை வெளியிட்டுள்ளார்.
பல வண்ணங்களுடன் கூடிய ஆபாச உடையை அணிந்து போஸ் கொடுத்துள்ள சனம், ஆபாச கமெண்டும் அடித்துள்ளார்.
அந்த உடையின் விலை 13 ஆயிரம் ரூபாயாம்.
இந்த போட்டோவை பார்த்து ரசித்து 12 லட்சம் பேர் லைக் கொடுத்துள்ளனர்.
அதில் இந்தி சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சனும் ஒருவர்.
– பா. பாரதி