கிருஷ்ணகிரி:

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே தேசிய நெடுஞ்சாலையில் சென்ற பெட்ரோல் டேங்கர் லாரி திடீரென தீப்பற்றி எரிந்தது. இதனால் சாலையில் சென்ற இதர வாகன ஓட்டிகள் அலறினர். இதையடுத்து அந்த சாலை போக்குவரத்து நிறுத்தப்பட்டது.

டேங்கர் லாரி எஞ்ஜின் கேபினில் உராய்வு ஏற்பட்டதால் தீப்பற்றியுள்ளது. சிறிது நேரத்தில் தீ லாரி முழுவதும் பரவி கொழுந்துவிட்டு எரிய தொடங்கியது. தகவலறிந்த தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அமைத்தனர். எனினும் லாரி முற்றிலும் எரிந்து நாசமாகிவிட்டது.

இதனால் அப்பகுதி முழுவதும் புகைமண்டலமாக காட்சியளித்து. இது குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.