கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த மருத்துவருக்கு  கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதால், அவரது வீடு அமைந்துள்ள பகுதியில் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.
விழுப்புரத்தில் அரசு மருத்துவராக பணியாற்றி வருபவர்  கிருஷ்ணகிரி அருகே உள்ள கட்டிக்கானப்பள்ளி பஞ்சாயத்தில் ஆர்.டீ.ஓ. மைதானம் அருகே  அமைந்துள்ள புதிய வீட்டுவசதி வாரியக் குடியிருப்பை சேர்ந்தவர். இவரது மனைவி  கிருஷ்ணகிரி மாவட்ட அரசு மருத்துமனையில் மருத்துவராக பணியாற்றி வருகிறார்.
இந்த நிலையில்  விழுப்புரத்தில் பணிபுரிந்து வரும் மருத்துவர். கடந்த 4 -நாட்களுக்கு முன் விடுப்பில் தனது வீடு அமைந்துள்ள கிருஷ்ணகிரி வந்துள்ளார். பிறகு மீண்டும் பணிக்கு சென்ற அவருக்கு இன்று கொரோனா சோதனை அறிகுறி தென்பட்டுள்ளது. இதையடுத்து, அவர் விழுப்புரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.
இதையடுத்து கிருஷ்ணகிரியில் உள்ள  அவரது மனைவி. ன் தகப்பனார். கீழ்தளத்தில் குடியுள்ள 9 – பேர் உட்பட 11 – பேருக்கு ரத்த மாதிரி எடுக்கப்பட்டு பரிசோதனைக்கு சென்னைக்கு அனுப்பப்பட்டது. அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். அவர்களுக்கு இதுவரை கொரோனா உறுதியாகவில்லை. அவர்களின் ரத்த பரிசோதனை முடிவு வந்தபிறகுதான் அவர்களுக்கு கொரோனா இருப்பது குறித்து தெரியவரும். 
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இதுவரை ஒருவருக்கும் கொரோனா தொற்று இல்லாத நிலையில், மருத்துவர் வருகையால் கொரோனா தொற்று பரவியிருக்குமோ என்று  மக்களிடையே  பரபரப்பு  ஏற்பட்டுள்ளது.