
இயக்குநர் ஹலிதா ஷமீம் இயக்கத்தில் வெளியான சில்லு கருப்பட்டி அந்தாலஜி படத்தில் மூன்றாவது கதையான ‘டர்ட்டுல்ஸ்’-ல் லீலா சாம்சன் ஜோடியாக நவனீதனாக நடித்தவர் கிராவ் மாகா ஸ்ரீராம்.
இவர் கிராவ் மாகா என்ற இஸ்ரேல் தற்காப்பு கலையின் நிபுணரும் கூட. இன்று கிராவ் மாகா பயிற்சி செய்யும் போது தனது வீட்டின் மொட்டை மாடியில் இருந்து தவறி விழுந்து அவர் இறந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஸ்ரீ ராம் கிராவ் மகாவை தமிழக காவல்துறை கமாண்டோ படை மற்றும் சென்னை மாநகர காவல்துறையினருக்கு கற்பித்திருந்தார். தவிர பெண்களின் பாதுகாப்புக்கான பட்டறைகளையும் தொடர்ந்து நடத்தி வந்தார்.
[youtube-feed feed=1]