சென்னை:

திமுக விவசாய அணிச் செயலாளர் கே.பி. ராமலிங்கம்,  தி்முக அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கம் செய்யப்படுவதாக அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் அறிவித்து உள்ளார்.

கடந்த 30ந்தேதி திமுக விவசாய அணிச் செயலாளர் கே.பி.ராமலிங்கம் கட்சியில் இருந்து விடுவிக்கப்படுவதாக திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் அறிவித்து உள்ளார்.

இந்த நிலையில், இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில்,  கழக கட்டுப்பாட்டை மீறியும், கழகத்துக்கு அவப்பெயர் ஏற்படும் வகையிலும் செயல்பட்ட கே.பி.இராமலிங்கம் அவர்கள், கழகத்தின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் தற்காலிகமாக நீக்கம் செய்யப்பட்டு உள்ளதாக அறிவித்து உள்ளார்..

தமிழகஅரசு கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து அனைத்துக்கட்சி கூட்டம் கூட்ட வேண்டும் என்று ஸ்டாலின் வலியுறுத்திய நிலையில், கே.பி.ராமலிங்கம்,  ‘இந்த நிலையில் அனைத்துக் கட்சி கூட்டம் நடத்துவது அவசியமற்றது’ என்று அரசுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.