சென்னை: அடையாறு மத்திய கைலாஷ் அருகே கார் ஒன்று  அதிகாலையில் விபத்தை  ஏற்படுத்தி கவிழ்ந்தது. விபத்துக்கு காரணம் காரை ஓட்டி வந்த நபர் குடிபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். விசாரணையில், காரை ஓட்டி வந்த நபர் கோயம்பேடு காவல் நிலையத்தில்  பணிபுரியும், உதவி கமிஷனரின் மகன்  என்பது தெரிய வந்துள்ளது.  குடிபோதையில் காரை ஓட்டி வந்த அவர், மத்திய கைலாஷ் அருகே, சென்டர் மீடியனில் மோதி, கார் கவிழ்ந்துள்ளது. அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

இதையடுத்து, போதையில் காரை ஓட்டி வந்த காவல்துறை உதவிஆணையாளர் மகன் மீது,  குடிபோதையில் வாகனம் ஓட்டுதல் மற்றும் விபத்து ஏற்பட்டதற்காக அவர் மீது பல பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

[youtube-feed feed=1]