Skip to content
  • Tue. Sep 15th, 2026

www.patrikai.com

  • Home
  • சிறப்பு செய்திகள்
  • செய்திகள்
    • தமிழ் நாடு
    • இந்தியா
    • உலகம்
    • அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்
    • விளையாட்டு
  • பேட்டிகள்
  • ஆன்மிகம்
    • ஸ்ரீ பாபா அருள்
    • கோவில்கள்
    • ஜோதிடம்
  • ஸ்பெஷல்.காம்
    • சிறப்பு கட்டுரைகள்
    • நெட்டிசன்
  • தொடர்கள்
    • விண்வெளி விந்தைகள்
  • சினிமா
    • சினி பிட்ஸ்
    • சினி ஆல்பம்
    • வீடியோ
தமிழ் நாடு

28ந் தேதி மீண்டும் திறக்கப்படுகிறது கோயம்பேடு காய்கறி மார்க்கெட்! வியாபாரிகள், ஊழியர்கள், தொழிலாளர்களுக்கு கொரோனா சோதனை…

Sep 25, 2020

சென்னை: கொரோனா தொற்று காரணமாக மூடப்பட்ட கோயம்பேடு மார்க்கெட் 28-ந் தேதி மீண்டும் திறக்க தமிழகஅரசு அனுமதி வழங்கி உள்ளது. இந்த நிலையில், கடைகளின்  உரிமையாளர்கள்,  ஊழியர்கள் மற்றும் அங்கு பணிபுரியும் சுமைதூக்கும் தொழிலாளர்கள் என அனைவரும் கொரோனா சோதனை நடத்த உத்தரவிட்ப் பட்டுள்ளது. அதன்படி, இன்றுமுதல் சோதனை நடத்தப்படும் என தெரிகிறது.

சென்னையில் கொரோனா பரவலுக்கு கோயம்பேடு மார்க்கெட் ஹாட்ஸ்பாட்டாக திகழ்ந்து கண்டுபிடிக்கப்பட்டது. அதையடுத்து, கடந்த மே 5-ந் தேதி கோயம்பேடு மார்க்கெட் மூடப்பட்டது. அதையடுத்து, தற்காலிக மார்க்கெட் திருமழிசையில் அமைக்கப்பட்டு, நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், தற்போது சென்னையில் கொரோனா ஓரளவு தடுக்கப்பட்டு  வருவதால், மூடப்பட்ட கோயம்பேடு மார்க்கெட் வருகிற 28-ந்தேதி மீண்டும் திறக்க தமிழகஅரசு அனுமதி வழங்கியது. முன்னதாக கடந்த 18ந்தேதி முதல் மொத்த வணிகக் கடைகள் திறக்க அனுமதி வழங்கப்பட்டது.
இந்த நிலையில், கோயம்பேடு வியாபாரிகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை  சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் (சி.எம்.டி.ஏ.)  வெளியிட்டுள்ளன.
அதன்படி,

 கொரோனா தொற்று பரவலை தடுக்கும் விதமாக கடைகள் திறப்பதற்கு 2 நாட்களுக்கு முன்பே, கடை உரிமையாளர்கள், பணியாளர்கள், தொழிலாளர்கள் ஆகிய அனைவரும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டும்.

மார்க்கெட்டுக்கு வரும் அனைத்து வாடிக்கையாளர்களும் மருத்துவதுறையினரால் உடல் வெப்ப சோதனை மற்றும் தேவைப்படும் இதர பரிசோதனைகள் செய்த பின்னரே மார்க்கெட்டுக்குள் நுழைய அனுமதிக்கப்படுவர்.

மார்க்கெட்டுக்குள் மூன்று சக்கர பயணிகள் ஆட்டோ மற்றும் இருசக்கர வாகனங்கள் செல்வது முற்றிலும் தடை செய்யப்படும்.

தனிநபர் (பொதுமக்கள்) கொள்முதல் மற்றும் சில்லரை வணிகம் முற்றிலும் தடைசெய்யப்படும்.

மொத்த காய்கறி விற்பனை அங்காடிக்கு வரும் சரக்கு வாகனங்கள் இரவு 9 மணி முதல் அதிகாலை 5 மணி வரை அனுமதிக்கப்படும்.

காய்கறி வாங்க வரும் வாடிக்கையாளர்களின் (சில்லரை வியாபாரிகளின்) வாகனங்கள் அதிகாலை முதல் காலை 9 மணி வரை அனுமதிக்கப்படும்.

காய்கறி மார்க்கெட்டில் உள்ள நுழைவுவாயில்கள் காலை 9 மணி அளவில் மூடப்படும்.

ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு சுத்தம் செய்தல் மற்றும் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Post navigation

தமிழக பா.ஜ.க.பொறுப்பாளர் மாற்றப்படுகிறார்…
பி.இ. பொறியியல் தரவரிசை பட்டியல் வெளியீட்டு தேதி 3வதுமுறையாக மீண்டும் மாற்றம்! 28ந்தேதி வெளியாகிறது…

Related Post

தமிழ் நாடு வர்த்தக செய்திகள்

60 ஆண்டுகளுக்கும் மேலான சில்லறை வணிக வரலாற்றைக் கொண்ட ‘விவேக்ஸ்’ தனது விற்பனை நிலையங்களை மூடியது

தமிழ் நாடு நெட்டிசன்

மில்லினியல்ஸ், Gen Z-யைத் தொடர்ந்து Gen X-யையும் தொற்றிக் கொண்ட 80’s ஸ்டைல் AI புகைப்படங்கள்… உங்களுக்கான Promptகள் இதோ!

தமிழ் நாடு

ஒப்புவித்தல் போட்டிபோல சட்டப்பேரவையில் பொய்யான குற்றச்சாட்டுகளை அடுக்கியுள்ளார் முதலமைச்சர் – உதயநிதி

உலகம்

உலகம் மருத்துவம்

ஆணுறுப்பை பெரிதாக்க சிகிச்சை: தாய்லாந்தில் இங்கிலாந்தைச் சேர்ந்தவர் உயிரிழப்பு

September 9, 2026 Sundar
இந்தியா உலகம்

அருணாச்சலப் பிரதேசம், அக்சாய் சின் : ஐ.நா. வெளியிட்டுள்ள புதிய உலக வரைபடத்தில் இந்திய – சீன எல்லைப் பகுதிக்கு இடைப்பட்ட பகுதியாக சித்தரிப்பு…

September 7, 2026 Sundar
உலகம்

11ம் நாள் காரியத்திற்கு தயாரான நேபாள குடும்பத்திற்கு மூதாட்டி உயிருடன் மீட்பட்டதால் ஆனந்த அதிர்ச்சி…

September 7, 2026 Sundar
உலகம் சிறப்பு கட்டுரைகள்

உலக வரைபடமே மாறுகிறது!

September 5, 2026 Sundar
உலகம்

ஹாரி–மேகன் அமெரிக்காவை விட்டு பிரிட்டனுக்குத் திரும்பியதில் மகிழ்ச்சி: டிரம்ப் கருத்து

September 3, 2026 Sundar

www.patrikai.com

Proudly powered by WordPress | Theme: Newspaperex by Themeansar.

  • Home
  • About Us
  • Contact Us
  • Archive page
  • Disclaimer