கோயம்பேடு ஆம்னி பேருந்து நிலையத்தில் தீ விபத்து: கொளுந்துவிட்டு எரிந்த ஆம்னி பேருந்துகள்

Must read

சென்னை: சென்னையில் கோயம்பேடு ஆம்னி பேருந்து நிலையத்தில் ஏற்பட்ட திடீர் தீ விபத்து பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

தலைநகர் சென்னையில் கோயம்பேடு தனியார் ஆம்னி பேருந்து நிலையம் உள்ளது. இங்கிருந்து தமிழகத்தின் மற்ற மாவட்டங்கள், ஆந்திரா, கர்நாடகா, கேரளா பல மாநிலங்களுக்கு பேருந்து சேவைகள் உள்ளது.

தற்போது கொரோனா ஊரடங்கு காரணமாக, பேருந்து சேவைகள் முழுவதும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. ஆகையால் கோயம்பேடு பேருந்து நிலையத்திலல் உள்ள பேருந்துகள் அங்கேயே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

இந் நிலையில், ஆம்னி பேருந்து நிலையத்தில் இன்று திடீரென தீ விபத்து ஏற்பட்டு இருக்கிறது. தீ விபத்தில் சிக்கி 3 பேருந்துகளும் முற்றிலும் எரிந்து சேதமடைந்தன.

இந்த விபத்தின் போது பேருந்து நிலையம் அமைந்த பகுதியில் கரும்புகை சூழ்ந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்து தீயணைப்புத்துறையினர் உடனடியாக சம்பவ இடத்துக்கு வந்து துரிதமாக செயல்பட்டனர். அதன் காரணமாக தீ அணைக்கப்பட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

இந்த விபத்து எப்படி ஏற்பட்டது? தீ விபத்துக்கான காரணம் என்ன என்பது குறித்து போலீசார் விசாரணையை ஆரம்பித்துள்ளனர். 2019ம் ஆண்டு இதே போன்று கோயம்பேடு ஆம்னி பேருந்து நிலையத்தில் தீ விபத்து ஏற்பட்டது,  குறிப்பிடத்தக்கது.

More articles

Latest article