சென்னை:
கோயம்பேடு மூலம் கொரோனா பரவுவதற்கு வியாபாரிகளே காரணம், பல முறை எச்சரித்தும் அவர்கள் கேட்கவில்லை என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சமி நேரடியாக குற்றம் சாட்டினார்.
தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வரும் நிலையில், இன்று காலை முதல்வர் எடப்பாடி பழனிசாமி அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடனும் காணொளி காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார்.
அப்போது, அரசின் விதிமுறைகளை பொதுமக்கள் கடைப்பிடித்தால் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க முடியும். எந்தளவிற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு தருகிறார்களோ, அந்த அளவிற்கு ஊரடங்கு தளர்வு செய்யப்படும் என்றும், கொரோனா பாதிப்பு முதலில் உயர்ந்து பின்னர் குறையும் என கண்டறியப்பட்டுள்ளது என்றும் தமிழகம், இந்தியாவிலும் தற்போது உயர்ந்துள்ள கொரோனா பாதிப்பு பின்னர் குறைய வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவித்திருந்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசியவர், கோயம்பேடு மூலம் கொரோனா பரவுவதற்கு காரணம் ஏன்.? என்று விளக்கம் அளித்தார்.
கோயம்பேட்டில் கொரோனா தொற்று ஏற்படும் என்று முன்பே கணித்து வியாபாரிகளை எச்சரித்தோம். ஆனால், அரசின் கொரோனா தொற்று குறித்த அரசின் எச்சரிக்கையை கோயம்பேடு வியாபாரிகள் ஏற்கவில்லை.
இது தொடர்பாக அரசு அதிகாரிகள் பலமுறை அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினோம், சந்தையை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும் என்று வலியுறுத்தினோம், பலமுறை கேட்டுக் கொண்டோம் ஆனால், வியாபாரிகள் அதை ஏற்க மறுத்துவிட்டனர்.
வேறு இடத்திற்கு மாறினால் வியாபாரம் பாதிக்கப்படும் என்றும், கருதி தயக்கம் காட்டினார்கள்.
ஆனால், எதிர்க்கட்சிகள், அரசு நடவடிக்கை எடுக்காததால் தான் கோயம்பேட்டில் கொரோனா தொற்று அதிகரித்தது என்று கூறி வருகின்றனர்… இது தவறு என விளக்கம் அளித்தார்.
தொடர்ந்து பேசியவர், அனைத்து மாவட்டங்களில் அத்தியாவசியப் பொருட்கள் தடையின்றி கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
இந்தியாவிலே மருத்துவ சிகிச்சை அளிப்பதலில் தமிழகம் முதன்மையாக விளங்குகிறது. மருத்துவமனையிருந்து படிப்படியாக பலர் குணமடைந்து, வீடு திரும்பி வருகின்றனர்.
சென்னையில் இருந்து சொந்த ஊர் திரும்பியவர்களால்தான் பல மாவட்டங்களில் மீண்டும் கொரோனா தொற்று பரவியது. இங்கு மக்கள் நெருக்கம் அதிகமாக இருப்பதால், கொரோனா தொற்று அதிகமாக கண்டறியப்படுகிறது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த அரசு எடுத்த நடவடிக்கைகள் சிறந்த பலன் கிடைத்துள்ளது.
சிறப்பு அதிகாரிகளை நியமித்து நோய் பரவலை கட்டுப்படுத்தி உள்ளோம்
இந்தியாவிலேயே அதிக பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது தமிழகத்தில்தான்.
ஊரடங்கு காலத்தில் அத்தியாவசிய பொருட்கள் தங்குதடையின்றி கிடைக்கிறது . எந்த இடத்தில் உணவு பிரச்சினை இல்லை என்ற நிலையை ஏற்படுத்தியுள்ளோம்
தொழிலாளர்களுக்கு தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது
பொதுத்தேர்வு எழுதும் 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மற்ற தேர்வு எழுதும் மாணவர்களுக்கும் போக்குவரத்து வசதிகளை ஆட்சியர்கள் ஏற்படுத்தி தர வேண்டும்.
தமிழகத்தில் மே 26 வரை உயரழுத்த மின் இணைப்புக்கு கட்டணம் வசூலிக்கக்கூடாது.
அரசின் நலத்திட்ட உதவிகள் மக்களுக்கு முழுமையாக சென்றடைவதை ஆட்சியர்கள் உறுதி செய்ய வேண்டும்.
விவசாயிகள் காய்கறிகளை சந்தைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
அரசின் அறிவுறுத்தலை கடைபிடித்தால் கொரோனா தொற்று பரவலை தடுக்கலாம்.
பொதுமக்களின் ஒத்துழைப்பு இல்லாமல் கொரோனா பரவலை தடுப்பது சுலபமல்ல
வெளிமாநிலத்தில் உள்ள தமிழர்களை மீட்பதற்கு படிப்படியாக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.