கோவில்பட்டி கடலை மிட்டாய்க்கு  இனி தனி மவுசு தான்..

திருப்பதிக்குப் போவோர் லட்டு வாங்காமல் வருவதில்லை.

திருநெல்வேலி செல்வோர் அல்வா சுவைக்காமல் திரும்பினால், அவர்கள் பயணம் பூர்த்தி ஆவதில்லை.

அதுபோல்-

கோவில்பட்டியை வாகனங்களில் கடப்போர், கடலை மிட்டாய் வாங்க மறப்பதில்லை.

தங்கள் ஊர் ‘கடலை மிட்டாய்’க்கு புவிசார் குறியீடு வழங்க வேண்டும் என்று அந்த பகுதி கடலை மிட்டாய் உற்பத்தியாளர்கள்,பல ஆண்டுகளாக வலியுறுத்தி வந்தனர்.

பெரும் போராட்டத்துக்குப் பிறகு கோவில்பட்டி கடலை மிட்டாய்க்கு, புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது.

இதனை புவிசார் குறியீடு பதிவாளர் அலுவலகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

அந்த அலுவலகத்தில் 5 ஆண்டுகளுக்கு முன்பே புவிசார் குறியீடு கேட்டு, விண்ணப்பம் செய்திருந்தனர், கடலை மிட்டாய் உற்பத்தியாளர்கள்.

இதற்கு வேறு யாரும் ஆட்சேபம் தெரிவிக்காத நிலையில், ஐந்து ஆண்டுகள் காத்திருப்புக்குப் பிறகு-

கோவில்பட்டி கடலை மிட்டாய்க்கு அங்கீகாரம் கிடைத்துள்ளது.

அந்த கடலை மிட்டாய் சுவைக்கு என்ன காரணம்?

’’கரிசல் மண்ணில் விளையும் கடலை, கருப்பட்டி மற்றும் தாமிரபரணி தண்ணீர் ஆகிய மூன்றின் கலவையே, இந்த ருசிக்குக் காரணம்’’ என்கிறார்கள், கோவில்பட்டி மக்கள்.

– ஏழுமலை வெங்கடேசன்,