கோவை:

நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து, மருத்துவ மாணவர் சேர்க்கையில் சென்னையைச் சேர்ந்த மாணவர் சேர்ந்த விவகாரம் வெளிச்சத்துக்கு வந்த நிலையில், மேலும் பல கல்லூரிகளில் இதுபோன்று பித்தலாட்டம் செய்து பல மாணவர்கள் மருத்துவ படிப்பில் சேர்ந்துள்ளதாக புகார் எழுந்துள்ளது.

இந்த நிலையில், கோவையில் உள்ள பிரபல தனியார் மருத்துவக் கல்லூரியான பிஎஸ்ஜி கல்லூரியிலும் 2 மருத்துவ மாணவர்கள் நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து இடம் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

நீட் ஆள்மாறாட்டம் தொடர்பாக, மருத்துவ மாணவர்களின் சான்றிதழ்களை மீண்டும் ஆய்வு செய்ய தமிழகஅரசு உத்தரவிட்ட நிலையில், சான்றிதழ் சரிபார்ப்பில் 2மாணவர்கள் ஆள்மாறாட்டம் செய்திருப்பதாக சந்தேகம் எழுந்துள்ளதாக பிஎஸ்சி மருத்துவக் கல்லூரி சார்பில் அரசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த சம்பவம் மேலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.