கோவை: கோயமுத்தூரில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சமூக விரோதிகளால்  தாக்கப்பட்ட பெரியார் உணவகம் இன்று மீண்டும் திறக்கப்பட்டது.

கடந்த சில நாட்களுக்கு  கோவை காரமடை அருகே கன்னார்பாளையத்தில் அருண் என்பவர் புதிதாக உணவகம் அமைத்து அதற்கு பெரியார் பெயரை சூட்டி பலகை வைத்திருந்தார். இந்த உணவகம் மீது மர்ம நபர்கள் தாக்குதல் நடத்தினர். மர்ம நபர்கள் தாக்குதலில் காயம் அடைந்த அருண் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார். இந்த தாக்குதலில் ஈடுபட்டவர்கள் இந்து மத வெறியர்கள் என்று கூறப்படுகிறது. இது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில்,  காரமடையில் ஒரு தரப்பினரால் தாக்கப்பட்ட தந்தை பெரியார் உணவகத்தை இன்று சமூகநீதி கண்காணிப்பு குழு தலைவர் சுப.வீரபாண்டியன், தபெதிக பொதுசெயலாளர் தோழர் கு.ராமகிருஷ்ணன் ஆகியோர் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தனர்.