சென்னை: நடிகை திரிஷா குறித்து அதிமுக முன்னாள் நிர்வாகி ஏ.வி.ராஜு சர்ச்சை பேச்சால் தனது புகழுக்கு களங்கம் ஏற்பட்டுள்ளதாகவும், தான் மனவேதனை நடைத்துள்ளதாகவும் கூறியுள்ளதுடன்,  இதற்காக அவர் நிபந்ததனையற்ற மன்னிப்பு கோர வேண்டும், இல்லையேல் நஷ்ட ஈடு என நடிகை திரிஷா வக்கீல் நோட்டீஸ் அனுப்பி உள்ளார்.  மேலும், தனக்கு எதிராக செய்திகளை வெளியிட்ட சன்டிவி உள்பட பிரபல  மீடியாக்களை குறிப்பிட்டு அவை மன்னிப்புக்கோர வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டு இருக்கிறார்.

அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட ஏவி.ராஜூ, சில நாட்களுக்கு முன்னர் அளித்த பேட்டியில், அதிமுகவில் எம்.எல்.ஏவாக இருந்த வெங்கடாஜலம், கூவத்தூரில் செய்த சேட்டைகள் பற்றி, அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட ஏ.வி.ராஜூ பேட்டிகொடுத்pதருந்தார். அவரது பேட்டியில்,  ‘அதிமுகவில் ஒரு சாதாரண எம்.எல்.ஏ.வாக இருந்த வெங்கடாஜலம் கூவத்தூரில் இருக்கும்போது தன்னுடன் பொழுதைக் கழிக்க நடிகை த்ரிஷா வேண்டும் என்று அடம்பிடித்தார். நான் கூவத்தூரில் இருக்கும் வெங்கடாஜலத்தைப் பார்க்கப்போனேன். வெங்கடாஜலம் மது குடிக்க மாட்டார். ஆனால், அதற்குப் பதிலாக கூவத்தூரில் இருக்குபோது த்ரிஷாவை வேண்டும் என்று கேட்டு அடம்பிடித்தார். இது நடிகர் கருணாஸுக்கு தெரியும். எந்ததெந்த எம்.எல்.ஏக்களுக்கு நடிகைகள் வேண்டுமோ, அவர்களுக்கு நடிகைகளிடம் பேசி அவர்களை கூவத்தூருக்கு அழைத்து வந்தது கருணாஸ் தான். பெரும்பாலான நடிகைகள் அங்கு வந்தனர். அதையெல்லாம் வெளிப்படையாக சொல்ல முடியாது. வெங்கடாஜலத்துக்காக நடிகை த்ரிஷாவிடம் ரூ.25 லட்சம் கொடுத்து அவரை அழைத்து வந்தனர். நாங்கள் பார்த்ததை கேட்டதைச் சொல்கிறோம்’’ என கூறி இருந்தார்.

ராஜுவின் இந்த பேச்சு  தொடர்பான வீடியோ வைரலானது. மேலும் கடும் ச சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், அதிமுக முன்னாள் நிர்வாகி ஏவி.ராஜூ மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்போவதாக நடிகை த்ரிஷா ட்வீட் செய்திருந்தார். அதுபோல,   அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ வெங்கடாசலம் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட ஏ.வி.ராஜுவுக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பி உள்ளார்.

மேலும், தென்னிந்திய நடிகர் சங்கம் கண்டனம் தெரிவித்ததது.  இதுதொடர்பாக நடிகர் சங்க தலைவர் நாசர் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில், தற்போது பொது வலைதளங்களில் சகோதரி திரிஷா, சகோதரர் கருணாஸ். குறித்து கேட்பதற்கு கூசுகின்ற ஆதாரமற்ற, பொறுப்பற்ற, தரமற்ற, கீழ்தரமான, வக்கிரமனப்பான்மையோடு, பரவ விடப்பட்டிருக்கும் பொய்கதையை தென்னிந்திய நடிகர் சங்கம் வன்மையாக கண்டிக்கிறது. திரைத்துறையை சார்ந்த பிரபலங்களை பற்றி பொதுவெளியில் அவதூறு பரப்பி சுய விளம்பரம் தேடிக் கொள்ளும் நபர்கள் நாளுக்கு நாள் அதிகமாகி வருகின்றனர். எல்லோரும் வெட்கித் தலைகுனியும்படி மீண்டும் ஒரு நிகழ்வு நிகழ்ந்துள்ளது. திரையிலும் பொதுவெளியிலும் இயங்கி வரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரான நடிகர் கருணாஸ் மீதும் தனது கடின உழைப்பாலும் திறமையாலும் நடிகையாக திகழும் திரிஷா மீதும் இப்படி அபாண்டமான அவதூறை அதுவும் பொது வாழ்க்கையில் இருக்கும் நபரே தனது அரசியல் சுயலாபத்துக்காக பரப்புவது வேதனை அளிக்கிறது.

கவனத்தை ஈர்த்துக் கொள்ளவும், கேட்போரை கீழ்த்தரமானவராய் கருதியும், இத்தகைய செயல்கள் நடந்தேறுவது, இனியும் நடக்க கூடாத வகையில் நடிகர் சங்கம் தீவிரமான முடிவுகளை எடுக்கும், சட்ட ரீதியாய் இக்குற்றத்தை அணுகவும் செய்யும். பண்பு மென்மை காரணமாய் பிரபலங்கள் பதில் பேச மாட்டார்கள் என்கிற பலத்தை பலவீனமாக்கி விளையாடுவதை இத்தோடு நிறுத்திக் கொள்ளவேண்டும். தென்னிந்திய நடிகர் சங்கம் தனது கடும் கண்டனத்தை தெரிவிப்பதுடன் சட்ட ரீதியான அனைத்து நடவடிக்கைகளுக்கும் துணை நிற்கும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறது என்று குறிப்பிட்டுள்ளார்.

இதன் காரணமாக  தனது பேச்சு குறித்து அதிமுக முன்னாள் நிர்வாகி ஏவி.ராஜூ விளக்கம் அளித்து வீடியோ வெளியிட்டார்.   அதில், என்னை கட்சியை விட்டு நீக்கியது குறித்தும், என்னிடம் வெங்கடாசலம் சொன்னது குறித்தும் மட்டுமே பத்திரிக்கையாளர்களிடம் பேசி உள்ளேன். எனக்கு தர வேண்டிய பணத்தை தராதது குறித்து ஈபிஎஸின் மனு கொடுத்தேன். ஆனால் அதனை அவர் விசாரிக்கவில்லை என்பதுதான் பிரச்னை.

எனக்கு அந்த பெண்ணை பற்றியோ, நடிகரை பற்றியோ யார் என்றே தெரியாது. முன்னாள் எம்.எல்.ஏ வெங்கடாசலம் பேசியது, த்ரிஷா மாதிரி என்று சொன்னாரே தவிர, அது த்ரிஷா என்று சொல்லவில்லை. நான் பேசிய வார்த்தையை சில தொலைக்காட்சிகள் தவறாக ஒளிபரப்பு செய்கிறார்கள். கூவத்தூருக்கு நான் சென்றபோது, அவர் இது குறித்து கூறினார்.   அழகான ஒரு சின்ன பெண் என்றுதான் பேசினாரே தவிர, நடிகை என்று சொல்லவில்லை. நான் கருணாஸ் பற்றி பேசவில்லை, கருணாஸ் அண்ணனும் இருந்தாரு, இதனை அண்ணன் சேரன் அவர்களும், விஷால் அவர்களும் புரிந்து கொள்ள வேண்டும். என் கருத்தால் த்ரிஷா மனம் புண்பட்டு இருந்தால் மன்னிப்பு கேட்கிறேன் என கூறி இருந்தார்.

இந்த நிலையில், நடிகை திரிஷா தரப்பில் அதிமுக முன்னாள் நிர்வாகி ஏ.வி.ராஜுக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளது.  அதில் நிபந்ததனையற்ற மன்னிப்பு கோர வேண்டும் இல்லையேல் நஷ்டஈடு கேட்டு வழக்கு தொடரப்படும் என்றும்,  தனக்கு எதிராக செய்திகளை வெளியிட்ட சில மீடியாக்களை குறிப்பிட்டு அவை மன்னிப்புக்கோர வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டு இருக்கிறார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டு இருக்கும் வக்கீல் நோட்டீஸில், “ தன்னுடைய மனுதாரருக்கு எதிராக பேசும் கருத்துக்கள் அனைத்தையும் நிறுத்த வேண்டும். தன்னுடைய மனு தாரருக்கு எதிராக பதிவிடப்பட்ட செய்திகளை, வீடியோக்களை நீக்க வேண்டும். அதே போல இந்த வக்கீல் நோட்டீசை பெற்ற 4 நாட்களுக்குள்  எங்களுடைய கட்சிக்காரரருக்கு எதிராக செய்திகளை வெளியிட்ட காரணத்திற்காக நீங்கள் நிபந்தனையற்ற மன்னிப்புக்கோர வேண்டும்.

அதனை நாளொன்றுக்கு 5 லட்சம் பிரதிகளை அச்சடிக்கும் ஆங்கில செய்தி தாளில் வெளியிடவேண்டும். புகாரை தெரிவிக்க எந்த அளவு முக்கியத்துவம் கொடுத்தீர்களோ, அதே அளவுக்கு மன்னிப்பை வெளியிடுவதற்கும் நீங்கள்முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.” என்று அவர் அதில் குறிப்பிட்டு இருக்கிறார்.