மும்பையில் இன்று 100 மிமீ மழைக்கு வாய்ப்பு: ரயில், வாகனப் போக்குவரத்து பாதிப்பு

Must read

மும்பை:

காராஷ்டிரா மாநிலத்தில் கடந்த ஒரு வாரமாக பெய்து வரும் கனமழையால், மும்பை நகரின் பல்வேறு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்தது. இதன் காரணமாக   புறநகர் ரயில்களின் போக்குவரத்தும், சாலைகளில் வாகனப் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் இன்று 100 மில்லி மீட்டர் அளவுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

மும்பையில் கடந்த வாரமாக  கனமழை பெய்தது வருவதால்  மும்பை நகரமே ஸ்தம்பித்து உள்ளது. புறநகரான அந்தேரி பகுதியில் போதிய வெளிச்சமின்மை காரணமாக எதிரே வருவதைப் பார்க்க முடியாத நிலை காரணமாக மூன்று கார்கள் ஒன்றுடன் ஒன்று மோதிக் கொண்டன. இந்த விபத்தில் 8 பேர் காயமடைந்ததாக தகவல் வெளியானது.

மும்பையில் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு முதல் பெய்து வரும் மழை காரணமாக தாதர், மத்திய மும்பை, குர்லா, அந்தேரி, சாகிநாகா ஆகிய பகுதிகளில் உள்ள தாழ்வான இடங்களில் வெள்ள நீர் சூழ்ந்து காணப்படுகிறது.

தெற்கு மும்பையில் உள்ள கொலாபா பகுதியில் செவ்வாய்க்கிழமை 8.30 முதல் புதன்கிழமை அதிகாலை 5.30 மணி வரை 171 மி.மீ. மழை பெய்ததாக வானிலை ஆய்வு மைய அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இதே காலகட்டத்தில் புறநகரான சான்டா குரூஸ் பகுதியில் 58 மி.மீ மழை பெய்ததாகவும் அவர் குறிப்பிட்டார். பிருஹன் மும்பை மாநகராட்சி வெளியிட்ட செய்திக் குறிப்பில், மலபார் ஹில் பகுதியில் 164 மி.மீ. கிராண்ட் ரோடு பகுதியில் 162 மி.மீ., கல்பா தேவி பகுதியில் 152 மி.மீ., பாந்த்ரா பகுதியில் 134 மி.மீ., செம்பூர் பகுதியில் 102 மி.மீ. மழை பதிவான தாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது

நகரின் சில பகுதிகளில் வெள்ள நீர் அதிகரித்து காணப்பட்டால் மாநகரப் பேருந்துகள் சில இடங்களில் மாற்றி விடப்பட்டதாக மாநகரப் போக்குவரத்துக் கழகம் தெரிவித்தது. இதேபோல் தாழ்வான பகுதிகளில் மழை நீர் அதிக அளவில் தேங்கியிருந்ததால் புறநகர் ரயில்கள் தாமதமாக இயக்கப்பட்டன.

14 ஆண்டுகளுக்கு முன் இதே ஜூலை 26ம் தேதி பெய்த கனமழையால், மும்பை மற்றும் புறநகர் பகுதிகள் அனைத்தும் வெள்ளக்காடாக மாறின. இதனால், அலுவலகம் சென்றிருந்த பலர், வீடுகளுக்கு திரும்ப முடியாமல் மிகுந்த அவதிக்கு ஆளாகினர்.

தற்போது மீண்டும் அதே நாளில் மும்பையில் கனமழை வெளுத்து வாங்கியதால், பொதுமக்கள் அனைவரும் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர். இந்தச் சூழலில், அடுத்து வரும் நாட்களில் அதி கனமழைக்கு வாய்ப்பிருப்பதால், பொதுமக்கள் அனைவரும் வீடுகளிலேயே தங்கியிருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து கூறிய இந்திய வானிலை மையம், மும்பைக்கு நெருக்கமான பாதைகள் மற்றும் புனே மற்றும் நாசிக் போன்ற இடங்களுக்கு சனிக்கிழமை வரை பலத்த மழை பெய்யக்கூடும், குறிப்பாக மும்பை, அலிபாக், ரத்னகிரி மற்றும் வெங்குர்லா வுக்கு நெருக்கமான நெடுஞ்சாலைகளில். “கடற்கரைக்கு அருகிலுள்ள நெடுஞ்சாலை பகுதிகளில் மழை அதிகரிக்கும்.

தற்போது உருவாகி வரும் காற்றழுத்தத் தாழ்வுநிலை காரணமாக மும்பை பகுதியில் அடுத்த 48 மணிநேரங்களுக்கு மழை பெய்யும் என்றும் குறிப்பிட்டார். மும்பைக்கு அருகில் கொங்கண் பிராந்தியத்தில் அமைந்துள்ள ராய்கட், ரத்னகிரி மாவட்டங்களில் 100 மில்லி மீட்டர் வரை மிக பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் இந்திய வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

 

More articles

Latest article