கம்பம்:
ம்பம் குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்த காட்டு யானை அரிசிக் கொம்பனை, தமிழக மற்றும் கேரள மாநில வனத்துறையினரும், போலீஸாரும், வருவாய்த் துறையினரு் வனப்பகுதிக்குள் விரட்டும் முயற்சியில் ஈடுபட்டிருக்கின்றனர்.

கேரள மாநிலம் மூணாறு சின்னக்கல் பகுதியில் அரிசிக் கொம்பன் என்கிற ஒற்றை யானை அட்டகாசம் செய்துவந்தது. இது குடியிருப்புப் பகுதிக்குள் புகுந்து ரேஷன் கடைகளை குறிவைத்து அரிசி மற்றும் சீனி மூட்டைகளை சுவைத்து வந்தது. இதனால் இதற்கு அரிசிக் கொம்பன் என்கிற பெயர் வந்தது. இதை கேரள வனத்துறையின் கடந்த மாதம் மயக்க ஊசி செலுத்தி பிடித்து, 4 கும்கி யானைகளின் உதவியுடன் தமிழக – கேரள எல்லையில் அமைந்துள்ள பெரியார் புலிகள் வனச் சரணாலயத்தில் கொண்டு வந்து விட்டனர்.