கடந்த வாரம் கொல்கத்தாவில் மேம்பாலம் இடிந்து 27 பேர் கொல்லப்பட்ட துயரச் சம்பவம் நடந்தது. மேற்கு வங்கத்தில் சட்டசபைத் தேர்தல் நடைபெறவுள்ளது.
இந்நிலையில், மேற்கு வங்கத்தில் வாக்கு சேகரிக்க பிரச்சாரத்தில் ஈடுபட்ட பிரதமர் மோடி, தேர்தல் பிரச்சார மேடையில் கீழ்கண்ட மனிதாபிமானமற்ற கருத்தை பதிவு செய்தார்.
“மம்தாவிற்கு வாக்களித்தால் மேம்பாலம் கதிதான் மேற்கு வங்கத்திற்கும்
இதுவே கடவுளின் செய்தி” என்றார்.
இதன் விவரம் பின்வருமாரு:
மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரசை எதிர்த்து பா.ஜ.க போட்டி இடுகின்றது. அங்கு நிலவும் வெற்றி வாய்ப்பு குறித்து ஏற்கனவே எழுதி இருந்தோம் :
படிக்க : மேற்கு வங்கத்தில் மீண்டும் மம்தா
படிக்க: பா.ஜ.க. மூன்றாம் இடம் பிடிக்கும்
இன்று மேற்கு வங்கத்தில் உள்ள மதரிஹாத்தில் பிரதமர் நரேந்திர மோடி பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
அப்பொழுது அவர், பாலம் இடிந்த போது , மம்தா சம்பவ இடத்திற்கு வந்து, இந்தத் திட்டம் முந்தைய அரசாங்கத்தால் முன்னெடுக்கப்பட்ட திட்டம் எனப் பேசியதைக் குறிப்பிட்டு , இதே மம்தா மேம்பாலம் வெற்றிகரமாக கட்டப்பட்டு இருந்திருந்தால், அதன் திறப்பு விழாவில் “இது முந்தைய அரசால் துவக்கப்பட்ட திட்டம் என்று கூறியிருப்பாரா ? என வினவினார்.
இது ஒரு நல்ல கேள்வி. ஆனால், அதன் பின்னர் தான், அவரது பாணியில் தம்முடைய பதவியின் மாண்பினை மறந்து, கொல்கொத்தாவில் பாலம் இடிந்தது கடவுளின் செயல் என்று மாநில அரசு கூறுகின்றது(அவ்வாறு கூறியது ஹைதராபாத்தை சேர்ந்த பாலம் கட்டிய நிறுவனம்) ,அது கடவுளின் செயல் அல்ல. அது ஊழலின் பிரதிபலிப்பு. ஒருவகையில் கடவுளின் செய்தி அதில் உள்ளது. அது என்னவென்றால், திரிணாமுல் மீண்டும் ஆட்சிக்கு வந்தால், மேம்பாலம் நொறுங்கியது போல் மொத்த மேற்கு வங்கமும் நொறுங்கும் என்பது தான் அது. ” என்று பேசினார்.
இது மிகுந்த சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
மஹாத்மா காந்தி ஒருமுறை, “தீண்டாமையைப் பின்பற்றுவதால் தான் பீகாரில் பூகம்பம் ஏற்பட்டது எனக் கூறி சர்ச்சையில் சிக்கினார்.
இதேபோன்று இவரும் மக்களின் உயிரிழப்பை தேர்தல் ஆதாயத்திற்காக பயன்படுத்துவதை பலரும் கண்டிக்கின்றனர்.
இவர் பிரதமர் மட்டும் அல்ல, இந்திய அறிவியல் கழகத்தின் தலைவரும் ஆவார். இவர் இவ்வாறு கடவுளின் பெயரை பயன்படுத்தி தேர்தல் ஆதாயம் காண விழைவது அர்த்தமற்றது.
பொதுவாகவே, அரசியல் தலைவர்கள், தம்முடைய பிரச்சாரத்தில் விஷமத்தனத்தை கலக்கக் கூடாது என்பதே பத்திரிக்கை.காமின் கருத்து.