கொல்கத்தா: பெண் முதல்வர் மம்தா பானர்ஜி ஆட்சி செய்து வரும் மேற்கு மாநிலத்தில் பயிற்சி பெண் மருத்துவர் ஓரு கும்பலால் வன்கொடுமை செய்யப்பட்டு, கொடூரமாக கொலை செய்யப்பட்ட விவகாரத்தில், மாநில முதல்வரான மம்தா பானர்ஜியே போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்து உள்ளார்.
தனது தலைமையிலான ஆட்சியில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டு, உயிரிழந்த பெண் மருத்துவருக்கு நீதி வழங்க வலியுறுத்தி மாநில பெண் முதல்வரான மம்தா பேரணி நடத்த உள்ளதாக திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.
யாருக்காக இந்த போராட்டத்தை மம்தா பானர்ஜி நடத்துகிறார் என்பது கேள்விக்குறியாக உள்ளது. தனது தலைமையிலான ஆட்சியில் இதுபோன்ற ஒருஅவலம் நடைபெற்றுள்ள தற்கு பொறுப்பேற்று மாநில முதல்வர்பதவியில் இருந்து மம்தா விலகியிருந்தால், அவரது முடிவை வரவேற்கலாம். ஆனால், தற்போது தனது தலைமையிலான அரசின் சட்டம் ஒழுங்கு சீர்கேடு காரணமாக நிகழ்ந்துள்ள அவலத்தை கண்டித்து நீதி விசாரணை கோரி அவர் பேரணி நடத்துவது மக்களை ஏமாற்றும் செயல் என்று கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறது.
அதாவது சட்டம் ஒழுங்கை தனது கையில் வைத்துள்ள பெண் முதல்வர் மம்தா, வழக்கின் விசாரணையை விரைந்து முடிக்க வலியுறுத்தி தனது கட்சியினருடன் பேரணி செல்ல உள்ளதாக அறிவித்து உள்ளார். மாநில முதல்வரே தனது மாநில அரசின் சட்டம் ஒழுங்கை கட்டுப்படுத்த முடியாத அவலத்தில், நாடு முழுவதும் போராட்டம் வெடித்துள்ள நிலையில், மக்களை குழப்பும் வகையில் தானே பெண் டாக்டர் பாலியல் கொலையை கண்டித்தும், விசாரணையை விரைந்து முடிக்க வலியுறுத்தியும் போராட்டம் நடத்த உள்ளதாக அறிவித்து உள்ளார்.
இந்தியாவிலேயே அதிக வன்முறை நடைபெறும் மாநிலமாக மேற்குவங்காளம் மாறி வருகிறது. அரசியல் வன்முறை எப்போதும் வங்காள வரலாற்றின் ஒரு அங்கமாக இருந்து வருகிறது. 50ஆண்டுகால கம்யூனிஸ்டு ஆட்சியில் இல்லாத அளவுக்கு மம்தா மாநில முதல்வராக பதவி ஏற்ற பிறகு வன்முறைகள், பாலியம் வன்கொடுமைகள் போன்ற சம்பவங்கள் கடுமையாக உயர்ந்துள்ளது. அரசியல் வன்முறை எப்போதும் வங்காள வரலாற்றின் ஒரு அங்கமாக இருந்து வருகிறது.
ஏற்கனவே கடந்த 1979 வன்முறையில் ஏராளமானவர்கள் இநத் நிலையில், பல நூற்றுக்கணக்கான ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் பட்டினியால் இறந்தனர். தொடரந்து அவ்வப்போது வன்முறை சம்பவங்கள் அங்கு வெறியாட்டமாக தொடர்கிறது. இதற்கு ஆளும் அரசுகளே காரணமாக உள்ளது. மாநில சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற தேர்தல் காலங்கள் முதல் உள்ளாட்சி தேர்தல் சமயங்களிலும் அங்கு வன்முறை தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதை கட்டுப்படுத்த வேண்டிய மாநில அரசுகள், வாக்கு வங்கிக்காக வன்முறை கட்டுப்படுத்துவதை கண்டும் காணாமல் உள்ளன. அதுவும் மேற்கு வங்க முதல்வராக மம்தா பதவி ஏற்றபிறகு, இதுபோனற் வன்முறைகள், ஜாதி மத ரீதியிலான வன்முறைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன.
கடந்த சில மாதங்களுக்கு (பிப்ரவரி 25, 2024 அன்று) மேற்குவங்க மாநிலம், பர்கானாஸ் மாவட்டத்தில் ஏற்பட்ட பாலியல் வன்முறைகள், கொலை சம்பவங்கள், நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த சந்தேஷ்காலி சம்பவத்தின் முக்கிய குற்றவாளிகள் மம்தா கட்சியைச் சேர்ந்த குண்டர்கள் என்பது தெரிய வந்தது. ஆனால், அவரை கைது செய்யாமல் மம்தா காலம் தாழ்த்திய நிலையில்,பெண்கள் குற்றவாளிகளை கைது செய்யக் கோரிபோராட்டம் நடத்தினர். பின்னர், நீதிமன்றம் தலையிட்டு, மேற்கு வஙக் அரசை கண்டித்த பிறகு, உள்ளூர் டிஎம்சி தலைவர்களை கைது செய்தது.
சந்தேஷ்காலி பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டுகளில் ஒரு சதவீதம் கூட உண்மை என்று கண்டறியப்பட்டால் அது “மிகவும் வெட்கக்கேடானது” என்று கூறிய கல்கத்தா உயர் நீதிமன்றம், பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலம் என்ற மேற்கு வங்கத்தின் பிம்பம் வீழ்ச்சியடையும் என்று கடுமையாக விமர்சித்தது.
இந்த நிலையில், தற்போது கொல்கத்தா ஆர்.ஜி. கர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பணியாற்றிய 31 வயது பயிற்சி பெண் மருத்துவர் கடந்த 9 ஆம் தேதி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
கொல்லப்பட்ட பெண் மருத்துவருக்கு நீதி கேட்டு கால்கத்தாவில் போராட்டம் வெடித்தது. இந்த போராட்டம் கலவரமாகவும் மாறியது. பல போராட்டங்களுக்கு பிறகே குற்றவாளி கைது செய்யப்பட்ட நிலையிலும் போராட்டம் ஓய்ந்தபாடில்லை. இந்த பெண் மருத்துவர் பாலியல் வன்முறை செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவத்தில், பல்வேறு அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இறந்த மருத்துவரின் உடற்கூறாய்வில் கூறப்பட்ட தகவல்களை பார்க்கும்போது, அந்த மருத்துவர் பாலியல் பலாத்காரம் செய்து கொன்ற குற்றவாளிகள் உண்மையிலேயே மனிதர்களே அல்லது மிருகங்களா என்று கேள்வி எழுப்பப்பட்டு வருகிறது.
ஐந்தறிவு கொண்ட யானை கூட வயநாட்டில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு அடைக்கலம் கொடுத்த நமது நாட்டில், ஒரு பெண்ணை பலர் சேர்ந்து கொடூரமான முறையில் பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவத்தை உடனே கையில் எடுத்து, கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டிய பெண் முதல்வரான மம்தா பானர்ஜி வாக்கு வங்கி அரசியலுக்காக முறையான நடவடிக்கை எடுக்காமல் காலம் தாழ்த்தி வருவதும், எதிர்க்கட்சியினர் மீது குற்றம் சாட்டுவம் வியப்பை ஏற்படுத்தி உள்ளது. இவரும் ஒரு பெண்ணா என சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறது.
இதற்கிடையில், டு முழுவதும் பலவேறு மருத்துவமனைகளில் போராட்டம் நடந்து வரும் நிலையில் நாடு முழுவதும் நாளை 24மணி நேர போராட்டத்தை அகில இந்திய மருத்துவ சங்கம் அறிவித்துஉள்ளது.
இதற்கிடையில் இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மறுத்த மம்தா, பின்னர் நீதிமன்றம் தலையிட்டதின் பேரில், மேற்கு வங்க அரசு சிபிஐ இடம் ஒப்படைத்துள்ளது. இந்த சம்பவம் காரணமாக மேற்கு வங்க அரசுக்கும், பெண் முதல்வரான மம்தாமீதும் கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில், அவரும் இறந்த மருத்துவரின் கொலைக்கு நீதிகேட்டு போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்து உள்ளார்.
முன்னதாக மருத்துவர்களின் போராட்டத்தை அரசியல் ஆதாயத்துக்காக பாஜக மற்றும் சிபிஎம் கட்சிகள் மடை மாற்ற முயற்சிப்பதாக மம்தா பானர்ஜி குற்றம் சாட்டியிருந்தார். ஏஐ தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்ட போலி வீடியோக்கள் மூலம் இணையத்தில் வதந்திகள் பரப்பப்படுவதாகவும் அவர் தெரிவித்திருந்தார். மேலும், பெண் மருத்துவர் கொலை வழக்கில், மாநில காவல்துறை 90 சதவீதம் விசாரணையை முடித்துவிட்டது என்றும் சிபிஐ இந்த வழக்கு விசாரணையை விரைந்து முடிக்க வேண்டும் என்று மம்தா பானர்ஜி வலியுறுத்தி இருந்தார்.
இந்த நிலையில், பாலியல் வன்கொடுமை செய்து கொடூரமாக கொலை செய்யப்பட்டு, உயிரிழந்த பெண்ணுக்கு நீதி வழங்க வலியுறுத்தி தனது தலைையில் திரிணாமுல் காங்கிர்ஸ கட்சி கண்டன பேரணி நடத்த உள்ளதாக தெரிவித்துள்ளது. (அதாவது தனது அரசுக்கு எதிராக தானே முன்னின்று போராட்டம் நடத்த இருப்பதாக அறிவித்துள்ளார்) திரிணாமுல் கட்சியின் பேரணி கல்கத்தாவின் மவ்லாலி தொடங்கி தர்மஸ்தலா வழியாக நடைபெறும் என அறிவித்துள்ளார்.
யாருக்காக இந்த போராட்டத்தை மம்தா பானர்ஜி நடத்துகிறார் என்பது கேள்விக்குறியாக உள்ளது. தனது தலைமையிலான ஆட்சியில் இதுபோன்ற ஒருஅவலம் நடைபெற்றுள்ள தற்கு பொறுப்பேற்று மாநில முதல்வர்பதவியில் இருந்து மம்தா விலகியிருந்தால், அவரது முடிவை வரவேற்கலாம். ஆனால், தற்போது தனது தலைமையிலான அரசின் சட்டம் ஒழுங்கு சீர்கேடு காரணமாக நிகழ்ந்துள்ள அவலத்தை கண்டித்து நீதி விசாரணை கோரி அவர் பேரணி நடத்துவது மக்களை ஏமாற்றும் செயல் என்று கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறது.
ஏற்கனவே மருத்துவர் பாலியல் கொலையை கண்டித்ரது, இன்று பாஜக பேரணி அறிவித்துள்ள நிலையில், மம்தாவும் மாலையில் பேரணி நடத்த உள்ளதாக அறிவித்து சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளார்.
பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கை, தற்போது சிபிஐ விசாரணை செய்து வரும் நிலையில், நியாமான விரைவான நீதியை வலியுறுத்தி பேரணி நடத்தப்படுவதாக திரிணாமுல் காங்கிரஸ் தெரிவித்துள்ளது. உயிரிழந்த பெண்ணுக்கு நீதி வழங்க வலியுறுத்தி மம்தா பேரணி நடத்த உள்ளதாக திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.
முதுநிலை பெண் மருத்துவர் கொலை விவகாரம்:]
மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் கடந்த வியாழன் (ஆகஸ்ட் 8) அன்று இரவு ஆர்.ஜி.கர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள செமினார் ஹாலில் 32 வயதுடைய பெண் மருத்துவர் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். இவர் முதுநிலை மருத்துவப் படிப்பு படித்து வந்துள்ளார்.
அவரை பிரேத பரிசோதனை செய்த நிலையில் கண்கள், வாய் மற்றும் பிறப்புறுப்பில் இருந்து ரத்தம் கசிந்தது தெரியவந்தது. கொடுமையான முறையில் பாலியல் வன்புணர்வுக்கு ஆளாக்கப்பட்டு அவர் கொடூரமாக கொல்லப்பட்டது தெரியவந்தது இறந்த மருத்துவரின் உடலில் 150 மி.கி உயிரணு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது என்பது இந்தக் குற்றச் செயலில் ஒன்றுக்கு மேற்பட்ட நபர்கள் கூட்டுப் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டதைக் குறிக்கிறது என்று உயிரிழந்த மருத்துவரின் பெற்றோர், நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பான வீடியோ தொடக்கத்தில் வெளியான நிலையில், பின்னர், அது மம்தா அரசினால் அழிக்கப்பட்டு உள்ளது. அந்த வீடியோவில், சுமார் 10க்கும் மேற்பட்டோர் அந்த மருத்துவமனைக்குள் நுழைந்ததும், இந்த பாலியல் வன்கொடுமைக்கு அங்கு பணியில் இருந்த சில பெண் பணியாளர்களும் துணை போனதாக கூறப்படுகிறது. ஆனால், இதுதொடர்பான ஆவணங்களை மம்தா அரசு அழித்துள்ளது. தற்போது, தான் நிரபராதி என்பதுபோல நாடமாகி வருகிறது.
இச்சம்பவத்தில், நீதி கேட்டு மருத்துவர்கள் மற்றும் மாணவர்கள் போராட்டத்தில் இறங்கினர். மேலும், இந்த கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்ட நிலையில் சிபிஐ அதிகாரிகள் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பெண் பயிற்சி மருத்துவருக்கு இந்த கொடூர சம்பவம் நிகழ்ந்த கொல்கத்தா ஆர்.ஜி.கர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குள் மர்ம நபர்கள் புகுந்து வன்முறையில் ஈடுபட்டு, அங்குள்ள உபகரணங்களை சேதப்படுத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், மேற்கு வங்க ஆளுநர் சி.வி.ஆனந்த போஸ் மருத்துவமனையில் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
ஆர்.ஜி.கர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குள் நேற்று இரவு புகுந்த மர்ம நபர்கள், அங்கே இருந்த மருத்துவர்கள் உள்ளிட்ட போராட்டக்காரர்களை தாக்கினர். காவல் துறை வாகனங்களையும் சேதப்படுத்தினர். பொதுச் சொத்துகள் சேதப்படுத்தப்பட்டன. நிலைமையைக் கட்டுப்படுத்த போலீஸார் தடியடி மற்றும் கண்ணீர் புகை குண்டுகளை வீச வேண்டியிருந்தது. இச்சம்பவத்தில் 15 போலீஸார் காயமடைந்ததாக கொல்கத்தா போலீஸார் தெரிவித்தனர்.
இந்திய மருத்துவ சங்கம் (Indian Medical Association ) இந்த வன்முறையைக் கண்டித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதில், “இத்தகைய நாசவேலைகள் அராஜகத்தை சுட்டிக்காட்டுவதாக அமைந்துள்ளன. சட்டம் – ஒழுங்கு சீர்குலைந்ததற்கு மாநில அரசுதான் நேரடிப் பொறுப்பு. போராட்டத்தில் ஈடுபட்ட இளம் மருத்துவ மாணவர்கள் குறிவைக்கப்பட்டுள்ளனர். சிபிஐ விசாரணை நடந்து கொண்டிருக்கும்போது, அதிகாரிகள் தங்களுடைய அலட்சியத்தால், மீண்டும் சட்டம் – ஒழுங்கைப் பாதுகாக்கத் தவறிவிட்டனர். இந்தச் சம்பவத்தை வன்மையாக கண்டிக்கிறோம்.” என்று தெரிவித்துள்ளது.