சென்னை: தமிழகம் முழுவதும் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. காலை 8 மணி அளவில் அறிவிக்கப்பட்ட தபால் வாக்கும் எண்ணும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது.

முன்னதாக  வாக்கு எண்ணிக்கை மையங்களுக்கு வந்த தேர்தல் அதிகாரிகள், அரசியல் கட்சிகளின் முகவர்களுக்கு கொரோனா சோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் தொற்று அறிகுறி இருப்பவர்கள் வாக்கு எண்ணும் மையத்திற்குள் அனுமதி மறுக்கப்பட்டது. அதற்கு பதிலாக மாற்று நபர்கள் பணியமர்த்தப்பட்டனர்.

திமுக தலைவர் ஸ்டாலின் போட்டியிட்ட கொளத்தூர் தொகுதியில் தேர்தல் நடத்தும் அதிகாரி தங்கவேலுக்கு  கொரோனா தொற்று உறுதியானது. இதையடுத்து, அவர் மாற்றப்பட்டார். புதிய அதிகாரியாக கண்ணன் நியமனம் செய்யப்பட்டு வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.

தமிழகம் முழுவதும் 75 மையங்களில் வாக்கு எண்ணிக்கை தொடங்கி நடைபெற்று வருகிறது.

வாக்கு எண்ணிக்கை நடைபெறுவதையொட்டி, தமிழகம் முழுவதும் சுமார் 1 லட்சம் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.