துபாய்:
சிசி டெஸ்ட் பேட்ஸ்மேன்கள் பட்டியல்வெளியிடப்பட்டுள்ளது.

நியூசிலாந்தின் கேன் வில்லியம்சன் முதலிடம் பிடித்துள்ள இந்த பட்டியலில் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் கோலி, நான்காவது இடத்தை பிடித்துள்ளார். இந்திய அணியின் துணை கேப்டன் ரகானே ஒரு இடம் முன்னேறி எட்டாவது இடத்தை பிடித்துள்ளார். இந்திய அணியின் புஜாரா ஆறாம் இடத்திற்கு முன்னேறியுள்ளார்.

பந்து வீச்சாளர்களுக்கான பட்டியலில் டாப் 10 பட்டியலில் இந்தியாவின் அஸ்வின், பும்ரா ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். ஆல்ரவுண்டர்கள் பட்டியலில் இந்தியாவின் ஜடேஜா மூன்றாம் இடத்தில் உள்ளார்.