புதுடெல்லி: 
ணிச்சுமை காரணமாகக் கோலி  இந்த சீசனின் இறுதியில் ஆர்சிபி அணித்தலைவர் பதவியிலிருந்து விலக முடிவு செய்தார் என்று கோலியின் குழந்தை பருவ பயிற்சியாளர் ராஜ்குமார் சர்மா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,  ஐபிஎல் 2021க்கு பிறகு பேட்ஸ்மேன் ஆர்சிபி அணித்தலைவர் பதவியிலிருந்து விலகுவதற்கு பணிச்சுமையே காரணம் என்றும்,  அவர் ஓய்வு பெறும் வரை, அவர் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக விளையாட விரும்புகிறார்.  அது அவருடைய விசுவாசத்தைக் காட்டுகிறது. இதுமட்டுமின்றி அணி நிர்வாகமும், கோலி ஒரு பகுதியாக இருக்க விரும்புகிறது. மேலும் அவரது பேட்டிங்கில் கவனம் செலுத்த வேண்டும் என்று விரும்புகிறது”  என்று அவரது பயிற்சியாளர் கூறினார்.