கோத்தகிரி
கோடநாடு எஸ்டேட் கம்ப்யூட்டர் ஆபரேட்டர் தினேஷ் தற்கொலை வழக்கு மறு விசாரணை நடைபெற உள்ளது.
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமாக கோடநாடு பகுதியில் ஒரு எஸ்டேட் உள்ளது. அவருடைய மறைவுக்கு பிறகு அங்குள்ள காவலர் கொல்லப்பட்டார். அங்குள்ள ஆவணங்களை கொள்ளையடிக்க முயன்ற போது இந்த கொலை நடந்ததாக கூறப்பட்டது. இந்த வழக்கு விசாரணைக்கு பல அதிமுக தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ஆயினும் தனிப்படையினர் இந்த வழக்கை விசாரித்து வருகின்றனர்.
இந்த கொள்ளை சம்பவத்துக்கு பிறகு இங்கு பணி புரிந்த கணினி ஆப்பரேடர் தினேஷ் தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டார். கடந்த 2017 ஆம் ஆண்டு ஜூலை 3 ஆம் தேதி அவர் தற்கொலை செய்துக் கொண்டதில் இருந்தே இதில் மர்மம் உள்ளதாக புகார் எழுந்தது. ஆனால் இது குறித்து எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாமல் இருந்தது. அதன் பிறகு ஆட்சி மாறி தமிழகத்தில் திமுக ஆட்சி அமைத்தது.
இந்நிலையில் தினேஷ் தற்கொலை வழக்கை மறுவிசாரணை செய்யக் அனுமதி கோரி காவல்துறையினர் கோத்தகிரி வட்டாட்சியர் சீனிவாசனிடம் மனு அளித்துள்ளன்ர். இது குறித்து காவல்துறையினர், “இந்த மனுவை வட்டாட்சியர் ஏற்றுக் கொண்டதும் தினேஷ் தற்கொலை வழக்கு சந்தேக மரண வழக்காக மாற்றப்பட்டு மறு விசாரணை நடத்தப்பட உள்ளது” எனத் தெரிவித்துள்ளனர்.