சென்னை:

கொடநாடு   கொலை, கொள்ளை விவகாரத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீது புகார் கூறிய சயன், மனோஜ் எழும்பூர் நீதி மன்றத்தில் ஆஜராகினர்.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கொடநாடு எஸ்டேட்டில் கடந்த  2017 ம் கொள்ளை சம்பவம் நடைபெற்றது. அதை தடுத்த காவலாளி  ஓம் பகதூர் கொல்லப் பட்டார்.  பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் பல்வேறு யூகங்களை ஏற்படுத்திய நிலையில், ஜெயலலிதாவின் கார் ஓட்டுனர் கனகராஜ் சேலம் அருகே ஒரு கார் விபத்தில் மரணம் அடைந்தார். மேலும், கொடநாடு எஸ்டேட்டில் பணி புரிந்து வந்த கேரளாவை சேர்ந்த சயன் குடும்பத்துடன் கார் விபத்தில் சிக்கினார். ஆனால், இந்த விபத்தில் சயனின் குடும்பத்தினர் அனைவரும் மரணமடைந்த நிலையில் சயன் மட்டும் தப்பினார். இதையடுத்து இந்த விவகாரம் கிடப்பில் போடப்பட்டது.

இந்த நிலையில், கடந்த கொடநாடு கொலை, கொள்ளை சம்பவம் தொடர்பாக தெகல்கா இணையதளத்தின் முன்னாள்  ஆசிரியர் மேத்யு சாமுவேல் என்பவர் பரபரப்பு வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதில், இந்த சம்பவம் தொடர்பாக முக்கிய புள்ளிகளுக்கு தொடர்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.

வீடியோவில் குற்றம் சாட்டப்பட்டவர் எடப்பாடி பழனிச்சாமி என்று கூறப்பட்ட நிலையில், சயன், மனோஜ் இருவரையும் தமிழக காவல்துறையினர் டில்லியில் கைது செய்து நீதி மன்றத்தில் ஆஜர் படுத்தினார். அப்போது, அவர்களை கைது செய்வதற்கான ஆவனங்களை கேட்ட மாஜிஸ்ட்ரேட் சரிதா, அதற்கு சரியான ஆவனங்களால் இல்லாததால், அவர்கள் இருவரையும் விடுதலை செய்து உத்தரவிட்டார். மேலும் 18ந்தேதி விசாரணைக்கு ஆஜராகுமாறும் கூறியிருந்தார்.

இந்த நிலையில், கொடநாடு கொலை, கொள்ளை வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்ட சயன், மனோஜ் இருவரும் எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜராகி உள்ளனர்.

அரசாங்கத்தையும் அமைச்சர்களையும் விமர்சித்ததாக எப்ஐஆர்