டில்லி:

கொட நாடு கொலை, கொள்ளை சம்பவம் தொடர்பாக  சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக் கோரி சமூக ஆர்வலரான  டிராபிக் ராமசாமி உச்சநீதி மன்றத்தில்  மனு அளித்துள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

டிராபிக் ராமசாமி சார்பில் தேமுதிக வழக்கறிஞர் ஜி.எஸ்.மணி உச்சநீதி மன்றத்தில் மனுவை தாக்கல் செய்துள்ளார். அதில், கொடநாடு கொலை, கொள்ளை தொடர்பாக சிபிஐ விசா ரணைக்கு உத்தரவிட வேண்டும் என கூறியுள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஜெ. மறைவை தொடர்ந்து அவரது மர்மமான கொட நாடு எஸ்டேட்டில் கொள்ளை நடைபெற்றது. கேரளாவை சேர்ந்த நபர்கள் எஸ்டேட்டில் புகுந்து அங்குள்ள ஆவணங்களை திருடியதாக கூறப்பட்டது. இந்த கொள்ளை விவகாரத்தில்  ஜெயலலிதாவின் முன்னாள் கார் டிரைவர் கனகராஜ், சாலை விபத்தில் இறந்துபோனார். மற்றொரு குற்றவாளியான கனகராஜின் கூட்டாளி சயன் தனது மனைவி வினுப்பிரியா, மகள் நீது ஆகியோருடன் சென்றபோது விபத்தில் சிக்கினார். அதில் அவருடைய மனைவி, மகள் இறந்தனர். சயன் மட்டும் உயிர் தப்பினார். கொடநாடு எஸ்டேட்டின் சிசிடிவி பராமரிப்பாளராக இருந்த தினேஷ் குமார் தற்கொலை செய்து கொண்டார்.

இவ்விவகாரம் தொடர்பாக வழக்கு நடைபெற்று வரும் நிலையில், கடந்த வாரம் தெஹல்கா முன்னாள் ஆசிரியர் மாத்யூ சாமுவேல் டில்லியில் ஒரு வீடியோ வெளியிட்டார். அதில், குற்றவாளி யான  சயன் அளித்துள்ள வீடியோ வாக்குமூலத்தில், இந்தச் சம்பவங்களின் பின்னணியில் முக்கிய நபர் இருப்பதாக கூறியுள்ளார். இது தமிழக முதல்வர்எடப்பாடி பழனிச்சாமி என கூறப்படுகிறது.

இதுகுறித்து புலனாய்வு செய்த தெகல்ஹா இணையதள பத்திரிகையாளரான முன்னாள் செய்தியாளர்  மேத்யூஸ் சாமூவேல், இந்த கொலை, கொள்ளை சம்பவத்துக்கு பின்னணி யாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இருந்ததாகவும், அப்போது கைப்பற்ற ஆவணங்களை கொண்டே கடைசியை கைக்குள் வைத்திருப்பதாகவும் குற்றம் சாட்டினார். இந்த சம்பவம் தொடர்பாக இந்த கொலையில் தொடர்புடைய  சயான் மற்றும் மனோஜ் தன்னிடம் வாக்கு மூலம் அளித்ததாகவும் குறிப்பிட்டிருந்தார்.

இந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. திமுக தலை வர் ஸ்டாலின் இதுகுறித்து விசாரணை கமிஷன் அல்லது சிபிஐ விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறார். அதுபோல எதிர்க்கட்சியின ரும் சிபிஐ விசாரணைக்கு வலியுறுத்தி வருகின்றனர்.

இதற்கிடையில் செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தன்மீது திட்டமிட்டே இந்த பழி சுமத்தப்பட்டுள்ளது. இதற்கு பின்புலம் யாரோ உள்ளனர். இதுகுறித்து காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுஇருப்பதாகவும் தெரிவித்தார்.

அதைத்தொடர்ந்துகாவல்துறை இதுதொடர்பாக  மேத்யூஸ் சாமுவேல் உள்பட சிலர் மீது வழக்கு பதிவு செய்து,. சயான் மற்றும் வயலார் மனோஜை கைது செய்து சென்னை அழைத்து வரப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகி வருகின்றன.

இந்த நிலையில், கொட நாடு கொலை, கொள்ளை சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தி உண்மையை வெளிக்கொணர வேண்டும் என்று சமூக ஆர்வலர் டிராபிக் சாமி உச்சநீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இரு மேலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.