சென்னை: கொடநாடு கொலை கொள்ளை வழக்கு தொடர்பாக மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உதவியாளர் பூங்குன்றனிடம் இன்று 3வது நாளாக தனிப்படை காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு குறித்து இதுவரை 210-க்கும் மேற்பட்டோரிடம் தனிப்படை போலீஸார் விசாரித்துள்ளனர். அதைத்தொடர்ந்து, ஜெயலலிதாவின் நேர்முக உதவியாளராக இருந்த பூங்குன்றன் என்பவரிடம் தனிப்படை போலீசார் கடந்த வாரம் இரு நாட்கள் விசாரணை நடத்தினர். அதைத்தொடர்ந்து, முன்னாள் அதிமுக எம்எல்ஏ ஆறுகுட்டியின் உதவியாளரிடம் விசாரணை நடத்தினர்.
இதைத்தொடர்து, இன்று 3வது நாளாக இன்று பூங்குன்றனிடம் மீண்டும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. ஏற்கனவே 2 நாட்கள் விசாரணை நடந்த நிலையில் 3-வது நாளாக தனிப்படையினர் இன்று விசாரிக்கின்றனர்