குன்னூர்: கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் 5 பேரிடம் விசாரணை நடைபெற்று வருவதாக காவல்துறை தெரிவித்து உள்ளது.
கடந்த 2017-ஆம் ஆண்டு 11 பேர் கொண்ட கும்பல் கோடநாடு எஸ்டேட்டில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது. அப்போது இரவு காவலாளி ஓம்பகதூர் என்பவர் கொலை செய்யபட்டார். இந்த சம்பவத்திற்கு மூளையாக செயல்பட்ட ஜெயலலிதாவின் முன்னாள் கார் ஓட்டுனர் கனகராஜ் சாலை விபத்தில் உயிரிழந்தார். அதனையடுத்து சயான், வாளையாறு மனோஜ், தீபு உள்ளிட்ட 10 பேர் குற்றவாளிகளாக சேர்க்கபட்டு வழக்கு விசாரணை உதகையில் உள்ள மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
இந்த வழக்கு திமுக அரசு பதவி ஏற்றதும் மீண்டும் சுறுசுறுப்படைந்துள்ளது. ஏற்கனவே விசாரிக்கப்பட்ட சாட்சிகள் மறு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த வழக்கில் 5 பேரிடம் விசாரணை தொடங்கி நடைபெற்று வருகிறத. அதன்படி திபூ, சதீசன், ஜம்சீர் அலி, பிஜின் குட்டி, ஜித்தின் ஜாய் ஆகியோரிடம் குன்னூர் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.