சென்னை:
கோடநாடு வழக்கில் சேலம் இளங்கோவனை விசாரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

நீலகிரி மாவட்டம் கொடநாடு எஸ்டேட்டில் 2107-ம் ஆண்டு கொலை, கொள்ளை சம்பவங்கள் நிகழ்ந்தன. இதில் கொடநாடு எஸ்டேட் காவலர் ஓம் பகதூர் கொல்லப்பட்டார். இவ்வழக்கில் முக்கிய குற்றவாளியான சேலம் கனகராஜ் மர்மமான முறையில் விபத்தில் உயிரிழந்தார். இதேபோல் கொடநாடு சம்பவத்தில் தொடர்புடைய சிலர் அடுத்தடுத்து உயிரிந்தனர்.

கோடநாடு கொலை, கொள்ளை விவகாரம் தொடர்பாக, சசிகலா வீட்டுக்கு சென்ற விசாரணை நடத்தி வந்த மேற்கு மண்டல ஐ.ஜி.சுதாகர் தலைமையிலான தனிப்படை இரண்டு நாளாக விசாரணை நடத்தியது. நேற்று சசிகலாவிடம் 6 மணி நேரம் விசாரணை நடைபெற்ற நிலையில், இன்று 4 மணி நேரம் என மொத்தம் 10 மணி நேரம் விசாரணை நடைபெற்றது.

2 நாட்களாக நடைபெற்ற இந்த விசாரணையின் போது பல்வேறு தகவல்களை சசிகலா தெரிவித்ததாக கூறப்படுகிறது. மேலும் கொடநாடு பங்காளவில் என்னென்ன இருந்தது? காணாமல் போன பொருட்கள் எவை? என 100க்கும் அதிகமான கேள்விகளை கேட்டு விசாரித்தனர் தனிப்படை போலீசார். இதனடிப்படையில் தனிப்படை போலீசார் அடுத்த கட்ட விசாரணை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.

இந்நிலையில், கோடநாடு வழக்கில் சேலம் இளங்கோவனை விசாரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

முந்தைய அதிமுக ஆட்சி காலத்தில் நிழல் முதல்வராக வலம் வந்தவர் சேலம் இளங்கோவன் என்பது குறிப்பிடத்தக்கது.