அம்மை நோய்களின் வரிசையில் இன்றும் நமக்கு ஓர் அச்சுறுத்தலாக இருந்து வருவது இந்த பொக்கன் அம்மை ( சிக்கன் பாக்ஸ்)
இது வேரிசெல்லா எனும் ஓர் வைரஸ் கிருமியால் தொற்றி பரவக்கூடியது ,
பழைய காலங்கள் போல் இன்றி , தற்போதைய நவீன விஞ்ஞான மருத்துவத்தின் அபரீத வளர்ச்சியால் இந்த நோயை 2 முறை போடும் தடுப்பூசியினால் 95% வராமல் தடுத்துவிட முடியும் ,
ஆனால் .
இந்த நோய் பாதித்தவரின் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மிக முக்கியமானதாகும் ,
1. நோயை ஆரம்ப நிலையிலேயே அறிய வேண்டும், ஏனெனில் முதல் 2 நாட்கள் இந்த நோய் மற்றவருக்கு தொற்றும் வீரியம் கொண்டதாகும் அதன் பிறகு , தோலில் வரும் மாற்றங்களை கொண்டு அதன் அடுத்த தொற்றும் வீரிய நேரங்களை கணிக்க முடியும் , தோராயமாக 7 வது நாள் முதல் 10 வது நாள் வரை மீண்டும் அதிகப்படியான வீரியத்தில் இந்த நோய் மற்றவருக்கு பரவும் ,
இன்குபேஷன் பீரியட் என சொல்லும் நோய் வீரிய நேரம் என்பது 10 முதல் 21ம் நாள் வரை ஆகும் ,
பொதுவாக உள்ள அறிகுறிகள்
உடல்வலி, தசைவலி, சோர்வு, காய்ச்சல் , உமட்டல் ,பசியின்மை ,
சிலருக்கு , உடல் முழுதும் பாதிப்புகள் வந்து மூச்சுத்திணறல் கூட வரலாம் ,
வராமல் தடுப்பது எப்படி ?
1. தடுப்பூசி
2. தொற்று விலக்கு
3. கை கழுவுதல், சுய சுத்தம் பேணுதல்
4. சரியான நேரத்தில் நோயறிதல்
5. முறையான மருத்துவம்
மருத்துவ முறைகள்
1. காற்றுள்ள இடங்களில் இருப்பது
2. அதிக நீர் பருகுதல் ,
3. தேவையான ஆண்டிபயாட்டிக்ஸ் மற்றும் இதர மருந்துகள் மருத்துவ பரிசோதனை செய்து பெற்றுக்கொள்தல்
4. முழுமையாக நோய் தீரும் வரை உடலை பேணுதல் ,
நோயுற்றவருடன் சுற்றி உள்ளவர்களுக்கான அறிவுரை .
1. நோய் உள்ளவரை தனிப்பட்ட அறையில் வைத்து பராமரித்தல் ,
2. அவரை பராமரிப்போர் தேவைக்கு ஏற்ப கை கழுவும் பழக்கம் கொள்ளுதல் ,
3. மருந்துகளை அவருக்கு சரிவர கொடுத்து பேணுதல்
4. வித்தியாசமான அறிகுறிகள் தென்பட்டால் உடனே மருத்துவரை அணுகுதல் ,
5. ஏற்கனவே நோய் வந்தவர்களுக்கு நோய் தொற்று குறைவே .
6. மற்றவர்களில் இதுவரை நோய் வராமல் இருப்போர் உடனே தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் ,
7. 12 மாதம் முதல் வயது வரம்பில்லாமல் உடனே வேரிசெல்லா தடுப்பூசி போட்டுக்கொள்தல் அவசியம் ,
12 மாதத்திற்கு குறைவான குழந்தைகள்
13. அவர்களுக்கு இயற்கையாகவே நோய் எதிர்ப்பு சக்தி ,தாயிடம் இருந்து எற்றிருக்கலாம் ஆதலால் தடுப்புசி தேவைப்படாது
ஆனால் ,
நோய் பாதித்தவரை கண்டு , அவரின் நோய் தாக்கம் பொறுத்து , வேறேதும் நோய்கள் இல்லாமல் இருந்தால் 12 மாதத்திற்கு குறைவானவர்கள் தடுப்புசியை தவிர்க்கலாம் .
வெயில் காலங்களில் இவ்வகை சிக்கன் பாக்ஸ் நோய் அதிவேகமாக பரவும் வாய்ப்புள்ளது , அனைவரும் தங்களை பாதுகாத்துக்கொள்வது நலம் .
தடுப்புசி குறித்து அதன் வாரம் …..
தகவல்: டாக்டர் சஃபி, நாகர்கோவில்